எங்களை காப்பாற்றிக்கொள்ள நிழத்திற்குகீழ் மாளிகை அல்ல, ஒரு பகுங்குழியே அமைத்தோம் - மஹிந்த
அரச தலைவர் என்ற ரீதியில் நாட்டிற்காக தான் முன்னெடுத்த தீர்மானங்களை கேலிக்குட்படுத்துகின்றமை, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மாத்தறை ஹக்மன பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொண்டு, நாட்டை முன்னொக்கி கொண்டு செல்வதற்காகவே அலரிமாளிகையில் நிலக்கீழ் மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நிழத்திற்கு கீழ் மாளிகை என்று இன்று கூறினாலும் உண்மையில் அது ஒரு பதுங்குழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதுங்குக்குழியில் தாங்கள் கூட்டங்கள் நடத்தியதாகவும், ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டால் அவற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவே அவ்வாறான ஒரு பகுங்குழியை நிர்மாணித்ததாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
Mahida sir did not do any wrong things under his Presidential period. He is alright ever.hi hi hi
ReplyDeleteயுத்தம் நடைபெறும் எந்த நாட்டிலும் இவ்வாறு அரச தலைவர்கள் பதுங்கு குழி மாளிகைகள் அமைப்பது சாதாரண விடயம் .அளவு கடந்து போகாமல் இருந்தால் சரி .பாட வந்தால் கிழவியும் பாடுவாளாம் என்பது பழமொழி .அன்று நாடு இருந்த நிலையையும் நாம் இன்று மீட்டி பார்க்க வேண்டும்.
ReplyDeleteமொத்ததுல யார்செத்தாலும் பரவாயில்ல நம்மகுடும்மத்தோட தப்பிக்கனும் எனும்முடிவை முன்கூட்டியே செய்துவைத்துள்ளீர்கள் அதுவும் நாட்டுமக்கள் பணத்தில் ரெம்பகேவலம் வாய்கூசாமல் பேசுதுபார்
ReplyDelete