Header Ads



நல்லாட்சி அரசாங்கம், நஞ்சாட்சி அரசாங்கமாக மாற்றமடைந்துள்ளது - நாமல் ராஜபக்ஸ

நல்லாட்சி அரசாங்கம் நஞ்சாட்சி அரசாங்கமாக மாற்றமடைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் அவன்ட் கார்ட் சம்பவத்தை காண்பித்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்த அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹூங்கம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று நல்லாட்சி அரசாங்கம் நஞ்சாட்சி அரசாங்கமாக மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியில் இரண்டு பிரிவுகள் காணப்படுவதாகவும், ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் 100 மீற்றர் தூரத்திற்கு வீதியொன்றை கார்பட் செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரியளவில் கொள்ளைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரிவினைவாதிகள் தோற்ற அனைத்தையும் இந்த அரசாங்கம் கிரமமான முறையில் வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்குத் தேவையான வரைவுத் திட்டத்தை எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் முன்னெடுத்து வருவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.