ரவி + கபீர் மோதலா..?
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீமிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சர்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அதிகாரிகள் நியமனங்களின் போது இந்த முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
நிதி அமைச்சரின் கீழ் இயங்கி வந்த அரச வங்கிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் நியமனங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்கிவிட்டு அமைச்சர் கபிர் ஹாசீம் புதிய அதிகாரிகளை நியமித்துள்ளார்.
இவ்வாறு அதிகாரிகள் நியமனங்களில் இருவருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
எங்கு போனாலும் சிறுபான்மை இனத்தவர் ஒரு அமைச்சுக்கு பொறுப்பாக இருந்தால் அதிகாரமற்றவராக இருக்க வேண்டும்.அதே அமைச்சுப்போருப்பை பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கினால் அவர் பூரண அதிகாரத்தோடு அந்த அமைச்சை கொண்டு செல்வார் உதாரணம் கடந்த காலங்களில் நீதி அமைச்சராக ரவுப் ஹகீம் இருக்கும் பொது எந்த அதிகாரமும் செய்ய முடியாதவராக இருந்தார் ஆனால் இப்போது இருக்கும் நீதி அமைச்சர் எந்தளவுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்பது அவன்கார்ட் ஆயுதக்கப்பல் விவகாரத்தில் பார்த்தால் எல்லோருக்கும் புரியும்.இதுதான் இலங்கை .
ReplyDelete