Header Ads



"ஜனாதிபதி மைத்திரி விலக வேண்டும்"

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக இருக்கும் வரையில் அவருடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஒன்றை ஒரே தியரியில் வைத்து முடிவுகளை காணவேண்டாம் என அல்பர்ட் ஐஸ்டையின் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8 மற்றும் ஆகஸ்ட் 17 ஆம் திகதிகளில் இந்த தியரி உறுதியானது. இதனால், மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்யப்பட்டு விட்டது.

மைத்திரிபால சிறிசேகனவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என பிரசன்ன ரணதுங்க மற்றும் குமார் வெல்கம ஆகியோரும் கூறியுள்ளனர் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உண்மையில் நேசிப்பாரேயானால், அவர் அதன் தலைமைத்துவத்தில் இருந்து விலக வேண்டும்.

துமிந்த திஸாநாயக்கவும் மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆக்கிரமித்து, அதனை தோற்கடித்தவர்கள் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.