"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத பிரான்ஸியர்கள் (வீடியோ)
பாரீஸ் நகரில், பொது இடத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு ஆதரவு திரட்டிய முஸ்லிம் இளைஞர் - கட்டியணைத்து ஆதரவு தெரிவித்த பொதுமக்கள்..!
பாரீசில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, இஸ்லாமிய விரோதிகள் முஸ்லிம் வெறுப்புணர்வை தூண்டி வரும் வேளையில், பிரான்ஸ் தலைநகரில் 'ரிபப்ளிக் ஸ்கொயர்' கட்டிட வளாகத்தில், கண்ணைக் கட்டிக் கொண்டும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஆதரவை திரட்டிய செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நான் ஒரு முஸ்லிம், இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாத செயலை ஆதரிக்கவில்லை, நான் உங்களை நம்புகிறேன், என் மீது நம்பிக்கையுள்ளவர்கள் என்னை கட்டியணைத்து ஆதரவு தாருங்கள், என்று கூறியவாறு நின்றுக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்குள் அங்கு கூடிவிட்ட பொது மக்கள், மேற்படி முஸ்லிம் இளைஞரை ஆரத்தழுவி ஆதரவு தெரிவித்தனர்.
முஸ்லிம் இளைஞரின் அபயக்குரலை கேட்ட பலரும் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதவாறு தங்களது பேராதரவை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், தனது கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றிவிட்டு கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றி, மேலும் ஆதரவு திரட்டினார் மேற்படி முஸ்லிம் இளைஞர். (வீடியோ)
Post a Comment