மஹிந்தவின் மீது வெறுப்படைந்த முஸ்லிம்கள், வெற்றிலையில் போட்டியிட்ட என்னை நிராகரித்தனர் - நஜீப்
தகவல் ஒலிப்பரப்பு முன்னாள் பிரதியமைச்சரும் முன்னாள் மூதூர் முதல்வருமான மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீதின் புதல்வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் மூதூர் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நஜீப் அப்துல் மஜீத் தினகரன் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு இது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது மாகாண சபை தேர்தலில் நான் முதலமைச்சராக்கப்பட்டேன். இதன் மூலம் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை நான் பெற்றேன். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்ததால் அவர்கள் பல்வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள். சில கட்சிகளின் கருத்துக்கள் இன நல்லுறவை சீர்குலைத்தவையாகவும் அமைந்துவிட ஏதுவாக இருந்தது.
அத்துடன் ஆட்சி அமைக்க பங்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் முரண் பட்டவைகளாகவும் மாறுபட்டவைகளாகவும் சில சந்தர்ப் பங்களில் அமைந்தன. இதனை விட மத்திய அரசாங்கத்தையும் மாகாண ஆட்சியையும் தொடர்ந்து எதிர்த்து வந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டியும் விமர்சித்தும் வந்தன. எமது நல்ல நடிவடக்கைகளுக்கும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதை எதிர்த்தே வந்தனர்.
இன முரண்பாடுகளுக்குள் பலகிப் போனமூவின மக்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது சற்று சிரமமானதாக இருந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாம் முடிந்தளவு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம். எனது தந்தையார் தமிழ், முஸ்லிம் உறவை பேணியவர், அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த காலத்தில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் துன்பங்களுக்காகவும் துணிந்துகுரல் கொடுத்தவர்.
கேள்வி : முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றதாக கூறும் நீங்கள் கடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெறாமைக்கான காரணம் என்ன?
பதில் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் ஆட்சியில் இறுதிக் காலப்பகுதியில் இந்நாட்டில் இடம்பெற்ற கொடுரங்களை நீங்கள் அறிவீர்கள்.
பொதுபலசேனா மற்றும் இராவண பலய போன்று இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை திட்டமிட்டு நசுக்க எடுத்த முயற்சிகளும் அவர்களை வந்தேறு குடிகளாக நினைத்து மேற்கொண்ட செயற்பாடுகளும் உலகமறிந்ததே.
முஸ்லிம்களின் இதயமான குர்ஆனை விமர்சித்ததும் அவர்களின் மஸ்ஜிதுகளை தாக்கியதும் ஹலாலான உணவுகளை தடுக்க முற்பட்டதும் முஸ்லிம்களை வேதனைப்படுத்தியது அத்துடன் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, ஹிஜாப் போன்ற உடைகளை தடுக்க வேண்டுமென போராட்டங்களை நடத்தினர்.
அளுத்கம, பேருவ ளையில் முஸ்லிம்கள் மீதுகட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம் பல்லாயிரக்கணக்கான சொத்துக்களை நாசமா க்கியமை, முஸ்லிம் களின் உயிர்களை பறித்தெடுக் கப்ப ட்டன.
தம்புள்ள பள்ளிவாயல் விவகா ரம் கிராண்பாஸ், தெஹிவளை பள்ளி வாயல் விவகாரங்களில் முஸ்லிம்கள் வேதனையும் ஆத்திரமும் கொண் டனர். எனினும் ஆட்சியிலிருந்த மஹிந்த அரசு இந்த இனவாதிகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதனால் ஜனாதிபதி தேர்தலில் ஏற்கனவே மஹிந்தவின் மீது வெறுப்படைந்த தமிழ், முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு மஹிந்தவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர்.
அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டதனால் முஸ்லிம் மக்கள் என்னை நிராகரித்தனர் எனினும் நான் கட்சி மாறி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை.
ரோபோவாக நடந்துவிட்டு காலம்கடந்தபின் இப்படிசொல்லியலுதா யார்தான் உங்ககண்ணீர் துடைப்பார்?
ReplyDeleteஅப்போது முஸ்லிம்களின் பிரச்சினை கண்ணுக்கு தெரியவில்லை மஹிந்த மட்டும் பெரிதாக கண்ணுக்கு தெரிந்தது உங்களை எல்லாம் முஸ்லிம் என்று எந்த பட்டியலில் சேர்ப்பது
ReplyDeleteMr. Najeeb
ReplyDeleteHaving known all those brutalities to the Muslim community and real nature of Rajapaksha clan, you wanted to bring him back to power, neglecting the plight of Muslims, by supporting and contesting for him shows you are real enemy of muslims. not only you but also Mrss, Rauf Hakeem, Athaullah and Hisbullah also wanted him back. But Rauf hakeem having known the Muslims stance he jumped at the last moment. So these congress leaders had no concern for the Muslims. But it is Mr. Rishad Badiuddin stood firmly against Rajapaksha mafia and defeated him. So he is the real Muslim leader, who deserve full support of Muslims.
அது தெரிந்தும் இறுதிவரை மகிந்தரோடுதானே இருந்தீர்கள். அதற்குக் காரணம்தான் என்ன..?
ReplyDeleteநான் சொல்கின்றேன்:
மகிந்தர் பிழையான வழியிலேனும் எப்படியாவது வெற்றிபெற்றுவிடுவார் என்ற நப்பாசை உங்களுக்கும் இருந்தது. அதனால் முஸ்லீம்களுக்கு அவர் ஏற்படுத்திய நெருக்கடிகளை விட பதவியும் சொகுசு வாழ்க்கையும்தான் பெரிதாகப்போனது உங்களுக்கு. அவற்றுக்காக ஒட்டிக்கொண்டு இருந்தீர்கள்..
வெற்றிலையை சாப்பிட முடியும், ஏறி பயணிக்க முடியாது.
ReplyDeleteஉங்களை மக்கள் நிராகரித்தது உங்களின்மீது மக்கள் கொண்ட வெறுப்பினாலேயே அன்றி வேறுயாரின்மீதும் கொண்ட வேறுப்பினளால் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாதது வேதனையளிக்கின்றது.
ReplyDelete