ரணிலை வீட்டுக்கு அனுப்ப தொடர்ந்து முயற்சி, சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க தீவிரம்..?
ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை அதிகாரம் கொண்டுள்ள கூட்டு அரசாங்கத்தை உடைத்து பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தின் அதிகாரத்தை பெற்றுகொள்வதற்கு சுதந்திரக் கட்சி விசேட செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
திலக் மாரபனவுக்கு பின்னர் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் இருவர் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளியேற்றுவதன் மூலம் இந்த செயற்பாட்டின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் பிரதமர் பதவிக்கு சவால் விடுத்து சுதந்திர கட்சியினால் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்காக இதுவரையில் பல இரகசிய கலந்துரையாடல் சுற்றுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்காக 25 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை இணைத்து கொள்வதற்கான செயற்பாடுகளும் கூட்டு அரசாங்கத்தில் செயற்படுகின்ற சுதந்திர கட்சியின் உயர் மட்ட அதிகாரிகள் ஊடாக செயற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய விரைவாக கூட்டு அரசாங்கத்தை உடைத்து சுதந்திர கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செயற்பாட்டிற்கு சுதந்திரக் கட்சியின் மஹிந்த தரப்பினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையை மிகவும் தெளிவுபடுத்தும் வகையில் பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா விசேட உரையொன்றினை ஆற்றியுள்ளார்.
இதுவரையில் நல்லாட்சியில் மீதமாக ஒன்றும் இல்லை என்பதனால் சுதந்திர கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2
நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை – எல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நல்லாட்சி என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமே நடந்துள்ளது. தனிக்கட்சி ஆட்சியமைக்க கட்சியினர் தற்போது முதல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் சிறப்புரிமைகளுக்கும், முகநூலுக்கும் ஏமாந்து சென்றனர். தற்போது முகநூலில் எஞ்சியது எதுவுமில்லை.
நலாட்சியில் எதுவும் மீதமில்லாமல் போயுள்ளது.
நல்லாட்சி மற்றும் ஊழல் குறித்து பேசியவர்கள் இன்று என்ன பேசுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியும். அது பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. ஆனால், இந்த நாட்டு மக்கள் பச்சிளம் குழந்தைகள் அல்ல.
நல்லாட்சி என்ற பெயரில் மக்களை ஏமாற்றியவர்கள் எத்தனை பேர் இந்த அரசியலில் உள்ளனர் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படையை நாம் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment