Header Ads



பாரீஸில் தீவிரவாதிகள் தாக்குதல் - இந்தப் பெண் என்ன சொல்கிறார் தெரியுமா..?

பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த முடியாது என அந்நாட்டை சேர்ந்த குடிமகள் ஒருவர் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

பிரான்ஸில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டின் துயரத்தில் பங்கேற்கும் வகையிலும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பேஸ்புக்கில் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதாவது, பேஸ்புக் முகப்பில் உள்ள படத்தில்(Profile Picture) பிரான்ஸ் நாட்டு தேசிய கொடி வருவது போன்ற ஒரு வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது வரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பேர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பிரான்ஸ் நாட்டு குடிமகளும் பத்திரிகையாளருமான Charlotte Farhan என்ற பெண், தன்னுடைய பேஸ்புக் முகப்பு படத்தினை மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டபோது, ‘பாரீஸில் நிகழ்ந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மட்டும் தன்னுடைய முகப்பு படத்தை மாற்றுவது தவறு.

உலகம் முழுவதிலும் தினந்தோறும் நடக்கும் பயங்கரவாத தாக்குதலில் மணிக்கு ஒருமுறை பல பேர் உயிரிழந்து வருகின்றனர். அவ்வாறு பார்த்தால், நான் தினமும் பல முறை எனது பேஸ்புக் படத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டில் பிறந்து தற்போது பாரீஸில் வசித்து வந்தாலும் கூட, உலகம் முழுவதையும் எனது தாய்நாடாகவே பார்ப்பதால் தான் பாரீஸ் தாக்குதலுக்காக மட்டும் பேஸ்புக் முகப்பு படத்தை மாற்ற மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சபாஷ் Charlotte Farhan !

    நீங்கள் மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணம் உயர்வானது மட்டுமல்ல மிகவும் நியாயமானதும் கூட.

    பாரிஸ் தாக்குதல் சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கப்படவேண்டியதே.

    ஆயினும் இதேபோல பாலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ் போன்ற நாடுகளில் நிகழ்ந்து நிகழ்ந்துவரும் தாக்குதல்களுக்காக Facebook அந்நாட்டுக்கொடிகளை ப்ரொபைலில் போட்டுக்கொள்ள அனுமதித்திருக்கலாமே..? என்ற கேள்வி நமது தலைகளின்மேலே ஊசலாடிக்கொண்டிருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.