"நல்லாட்சி தொடர்பான பொதுமக்களின், கனவுகள் நொருங்கியது"
நல்லாட்சி தொடர்பான கனவுகளுடன் அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள அரசின் செயல்பாடுகள் காரணமாக பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் நொருங்கிப் போயுள்ளதாக கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
திவயின பத்திரிகையின் ஞாயிறு வார இதழுக்கு புரவெசி பலய அமைப்பின் முக்கியஸ்தர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி நிர்மால் ரஞ்சித்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிராமியப் புறங்களில் பெற்றிருந்த செல்வாக்கைப் பார்த்து அவரை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று ஆரம்பத்தில் நாங்கள் நினைத்திருந்தோம்.
எனினும் பொதுமக்களின் மீதான அடக்குமுறை காரணமாக மஹிந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த அரசாங்கமும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நொருங்கிப் போகச் செய்துள்ளது.
நல்லாட்சி என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையே இந்த அரசின் செயற்பாடுகள் மூலம் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தொடர்ந்தும் கவலை தெரிவித்துள்ளார்.
2
நல்லாட்சி அரசாங்கம் தொடர்பாக கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றமாகிப் போன அதிர்ச்சியின் காரணமாகவே சோபித தேரர் சுகவீனமுற்றிருப்பதாக தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக கலைஞர்களும், பொதுமக்களும் இணைந்து புரவெசி பலய எனும் அமைப்பை ஸ்தாபித்திருந்தனர். இந்த அமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் மஹிந்த தரப்புக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சினிமா கலைஞர் தர்மசிறி பண்டாரநாயக்க, நல்லாட்சி அரசாங்கம் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதில் பாரிய பங்காற்றிய சோபித தேரர் திடீர் சுகவீனம் அடையவும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சோபித தேரர் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார். அந்த ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தான் அவர் திடீரென்று கடுமையமான சுகவீனமுற்றுள்ளார் என்றும் தர்மசிறி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
This is true. Anyone can meet them directly and pointed out their wrongness. No?
ReplyDelete