முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சீர்த்திருத்தம் வேண்டும் - முஸ்லிம் பெண்கள் முன்னணி
(டாக்டர்.எம்.ஐ.எம்.ஜெமீல்)
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி,செயல் முன்னணி நிறுவனத்தின் கோரிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் கருத்துகளுக்காக முன்வைக்கப்படுகின்றது.
'நாம் நீதிக்கான சமூக மாற்றத்தில் ஒரு பங்காவோம்'
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை கற்று அதில் மிகவும் தீவிரமாக செயற்படும் கரிசனையுள்ள பெண்கள் குழுவாக நாம் இருப்பதால் தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் ஆள்சார் சட்டமும் அது பெண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கமும் பற்றி முற்றாக அறிந்திருக்கின்றோம். எனவே, நாம் குரலெழுப்ப முடியாத பெண்களின் தேவைகளை அறிந்து நீதியையும், சமத்துவத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் பல்வேறுபட்ட அம்சங்களை சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டுமென நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். இது தொடர்பில், அமைச்சரவையால் இறுதியாக 2009ல் ஒரு செயற்குழு தெரிவு செய்யப்பட்டது. இச்செயற்குழு நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பதற்காக தற்பொழுது அதன் இறுதி அறிக்கையை தயார்படுத்துகிறது. இதற்காக பின்வரும் சீர்த்திருத்தங்களை செய்யுமாறு இத்தால் கோரிக்கை விடுகிறோம்,
மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள்
1) மணமகளின் சம்மதம் மற்றும் மணமகளின் கையொப்பம்
2) பெண்களுக்கான திருமணவயதெல்லை– 16 வயது ( ஆரம்பத்தில் 12)
3) பஸஹ் (மனைவியால் கோரும் விவாகரத்து) விவாகரத்திற்கான அடிப்படைகளை விரிவாக்கல் - பொருத்தமின்மை போன்ற காரணங்களும் உள்ளடக்க வேண்டும்
4) திருமண ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட வேண்டும் ,தலாக் இதப்விஸ் விவாகரத்தின் பின் தமது உரிமைகளை கையளித்தல் போன்ற விடயங்களை விவாக ஒப்பந்தத்திலேயே இரு சாராரும் ஏற்படுத்திக்கொள்ளல்.
5) பலதாரமணத்திற்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். (நிபந்தனைகளின் அடிப்படையில்)
6) கணவன் மூலமாக வழங்கப்படும் விவாகரத்தில் (தலாக்) ஒருதலைப்பட்சமாக வழங்கப்படும் விவாகரத்திற்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். (காரணங்கள் எதுவுமின்றி விவாகரத்து வழங்குதல் போன்றவற்றிற்கு)
7) ஒரு திருமணம் பதியப்படும் போது அது திறத்தவர்களின் 01ம், 2ம், 3ம் திருமணம் என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பிடுவதற்கான கட்டம் ஒன்று திருமணபதிவேட்டில் காணப்படவேண்டும்.
8) குலா விவாகரத்து மேலதிக காலதாமதங்கள் எதுவுமற்று வழங்கப்பட வேண்டும் .ஒரு பெண் தனது மஹரை பணரீதியான பெறுமதியில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் எவ்வித நிபந்தனைகளுமற்று குலா விவாகரத்துப் பெறலாம்.
9) தாம் விரும்பும் மத்ஹபிலும் இருப்பதற்கான உரிமை சகலருக்கும் உண்டு (ஷாபி,மாலிகி, ஹன்பலி, ஹனபி)
10) பராமரிப்பு செலவு பெறும் உரிமை விவாகரத்தால் பாதிக்கப்பட்ட மனைவி பிள்ளைகளுக்கான பராமரிப்பு வழங்குவதை வினைத்திறனாக நடைமுறைப்படுத்த வேண்டும் - இடைக்கால மற்றும் கடந்தகால பராமரிப்பையும் உள்ளடக்க வேண்டும்
11) கைக்கூலி மீட்புதொடர்பான சரியான நடைமுறை காணப்பட வேண்டும்.
12) பஸஹ் மற்றும் தலாகிற்கும் மதாஹ் வழங்கப்பட வேண்டும்
13) காதி நியமிப்பு ,சம்பளம் ,காதிகளின் தகைமை என்பன பற்றிய தெளிவு காணப்பட வேண்டும்
14) பெண்களுக்கும் காதிகளாக நியமனம் பெறும் உரிமையுண்டு
கையொப்பம்
ஜெசீமா இஸ்மாயில்
பைசுன் சக்கரியா
அனபேரியா ஹனீபா
சபினாஷ; ஹசன்தீன்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி,செயல் முன்னணி (ஆறுசுயுகு) இ பணிப்பாளர்கள்;, கொழும்பு.
Post a Comment