அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு, லஞ்சம் வழங்க முயற்சி
அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு லஞ்சம் வழங்க முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான இரண்டு ஓடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராஜிதவின் நெருங்கிய சகா ஒருவரின் ஊடாக இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து மில்லியன் ரூபா லஞ்சப் பணத்தை ராஜிதவின் நெருங்கிய சகாவான டொக்டர் சமரசுந்தரவிடம் இந்த வழங்கப்பட்டுள்ளது.
டொக்டர் செயாரு சமரசுந்தர அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
டொக்டர் சமரசுந்தரவிற்கும் நிசாங்க சேனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சம்பாசனை குறித்த ஓடியோ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லஞ்சம் வழங்குவது குறித்து முதலாவது ஓடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் லஞ்சம் பெற்றுக்கொள்ள மறுப்பது குறித்து இரண்டாவது ஓடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஓடியோ தகவல்களின் படி லஞ்சம் வழங்குவதற்கு ஐந்து மில்லியன் ரூபா பணத்தை டொக்டர் சமரசுந்தர பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் இந்தப் பணத்தை மீள வழங்குவதாக சமரசுந்தர நிசாங்க சேனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
லஞ்சம் பெற்றுக்கொள்வதனைப் போன்றே லஞ்சம் வழங்குவதும் இலங்கையில் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment