Header Ads



மைத்திரியை சந்தித்த கோதபாய, அறிவுரையுடன் பாராட்டும் தெரிவித்தார்

ஜெனீவா சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அறிவுரை விடுத்துள்ளார்.

ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதவான்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கோதபாய ராஜபக்ஸ கோரியுள்ளார். கடந்த 27ம் திகதி கோதபாய ராஜபக்ஸ, ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மெக்ஸ்வல் பரணகம அறிக்கை தொடர்பிலும் கோதபாய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பாக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை கண்டிக்கத் தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளினால் முப்படையினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இது பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் எனவும் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார். இந்த நிலைமையை மாற்றியமைக்க ஜனாதிபதி எடுத்துக்கொள்ளம் சிரத்தை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

கோதபாயவுடன் சந்திப்பு நடத்தப்பட்ட தினத்தில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பெருந்தெருக்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.

எவ்வாhறன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் அரச அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது தமக்கு அது குறித்து அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.