டீ குடிப்பது, புற்றுநோயைத் தடுக்கும்
கருப்பு மற்றும் கிரீன் டீ குடிப்பது புற்றுநோயைத் தடுக்கும் என்று இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஹசன் முக்தார் தெரிவித்துள்ளார்.
இந்திய தேயிலை சங்கம் சார்பில் கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கூறுகையில்,
" டீ உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். டீயில் பல மருத்துவ பயன்கள் இருக்கின்றன. புற்றுநோய் வராமல் தடுக்கும் பல எதிர்ப்பு சக்திகள் டீயில் இருக்கின்றன.
நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் டீயில் அதிகம் உள்ளன. வழக்கமாக டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் அவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர் வரும் அபாயம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கேன்சரை ஊக்குவிக்கும் செல்கள் உற்பத்தியாவதை டீ தடுக்கிறது. இதனால், தோல், கல்லீரல், புராஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பகங்களில் கேன்சர் உருவாவது தடுக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளை விட அதிக அளவில் டீ அருந்தும் பழக்கம் ஜப்பான், சீனா நாடுகளில் உண்டு. மருத்துவப் பயன்கள் அதிகம் கொண்ட ஒரே உற்சாக பானம் டீ மட்டுமே என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நிறுவனங்கள் பிரம்மாண்ட அளவில் விளம்பரம் செய்து டீயின் மருத்துவ பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
Post a Comment