Header Ads



கல்லால் அடித்து மர­ண தண்டனையை நிறைவேற்றும், தீர்ப்புக்கு எதிராக இலங்கை நடவடிக்கை

கள்ளக் காதல் விவ­காரம் ஒன்றில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட இலங்கை பணிப் பெண்­ணொ­ரு­வ­ருக்கு கல்லால் அடித்து மர­ணத்தை ஏற்­ப­டுத்­து­மாறு சவூதி அரே­பிய நீதி­மன்றம் ஒன்று தீர்ப்­ப­ளித்­துள்­ள­தாக சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரக தக­வல்கள் தெரி­வி­க்கின்­றன.

கொழும்பு மரு­தானை பிர­தே­சத்தைச் சேர்ந்த திரு­ம­ண­மான பெண்­ணொ­ரு­வ­ருக்கே இவ்­வாறு மரண தண்டனை தீர்ப்பை சவூதி அரே­பிய நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவ­ருடன் பாலியல் ரீதி­யாக உறவு வைத்­தி­ருந்­த­தாக கூறப்­படும் விவா­க­மா­காத பிறி­தொரு இலங்கை இளை­ஞ­ருக்கு 100 கசை­ய­டிகள் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் சவூதி நீதி­மன்றில் இடம்­பெற்ற போது இந்த இலங்கை பெண் தான் குறித்த இளை­ஞ­ருடன் உறவு கொண்­ட­தாக ஒப்­புக்கொண்டுள்ளார்.

குறித்த ஒப்­புதல் வாக்குமூலத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் இந்த தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்ய அவ­காசம் உள்ள நிலையில், மேன்முறை­யீட்­டினைச் செய்து தேவை­யான சட்ட உத­வி­களை வழங்கி குறித்த பெண்­ணுக்கு விதிக்­கப்­பட்டதண்­ட­னையை குறைக்க அல்­லது ரத்துச் செய்ய சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரகம் ஊடாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அதற்­கான ஆலோசனைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆலோசனை தூதரகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

3 comments:

  1. ஒரு நாட்டில் தொழிலுக்கு சென்றால் அந்த நாட்டு சட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதுவல்லாம் கவனத்தில்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டு அரசாங்கத்தையும்,தொழிலுக்கு சென்ற நாட்டையும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை.

    ReplyDelete
  2. அந்த பெண் செய்தது குற்றமாகவே இருக்கட்டும். குற்றம் புரிந்தவர்களை அவரவர் நாட்டில் ஒப்படையுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    ஆனால் இன்னொரு நாட்டின் பிரஜையை கல்லால் அடித்துக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே சட்டத்தை ஒரு அமெரிக்கப் பெண்ணுக்கு நிறைவேற்ற முடியுமா இந்த சவூதி வாலாக்களுக்கு..? அரபு மொழிபுரியாத மூதூர் ரிசானா நபீக்கிடம் ஒப்புதல் கையெழுத்தை எப்படி வாங்கினார்கள் என்பதை உலகமே அறியும்.

    இவ்வளவு ஏன் டிஸ்னிலாண்ட்டை 3 நாட்களுக்குமேல் குத்தகைக்கு எடுத்து மதுப்பார்ட்டியும் விபச்சாரமும் நடாத்திய முன்னாள் சவூதி மன்னரின் மகனுக்கு என்ன தண்டனை வழங்கினார்கள்..?

    ReplyDelete
  3. ஆகஆத்க்குமஊஆந்சவுதி அரசாங்கம் என்னதான் சட்டம் பேசினாலும் ஒரு மஹ்றம் இல்லாத பெண்ணை ஒரு இஸ்லாமிய நாடு அணுமதித்திருக்கக்கூடாது இது முதலாவது தவறு,இரண்டாவது ஒரு அமாணிதமான பெண் ணை தனிமையில் விட்டதால்தான் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றது இதை விட்டு இஸ்லாமிய தண்டணையை மட்டும் நிறைவேற்றும் போது அன்னிய சமூகத்துக்கு ஆரம்பம் விளங்காது எனவே சவூதி அரசாங்கம் மஹ்றம் பேணும் விடயத்தில் கவணமாக இருக்கவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.