தீவிரவாதிகளை தேடி, ஐரோப்பா முழுவதும் தேடுதல் வேட்டை
பாரீஸ் நகர தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். மேலும் தீவிரவாதிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு-மதுபான விடுதிகள் உள்ளிட்ட 6 முக்கிய இடங்களில் நடத்திய அதி பயங்கர தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்த 352 பேரில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களில் இருவர் மெக்சிகோ நாட்டையும், ஒருவர் இங்கிலாந்தையும் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 7 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியாயினர். ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இதனிடையே தீவிரவாதிகள் பற்றி துப்பு துலங்கி வருகிறது. இந்த தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் தந்தை-மகனை பாரீஸ் நகர போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் இருவரையும் போலீசார் விசாரணைக்காக ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் பலரைத் தேடி வருகின்றனர். பாரீஸ் பத்தாகிளான் இன்னிசை அரங்கில் தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகள் யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது.
ஒருவர் 29 வயது உமர் இஸ்மாயில் மஸ்தேபை என்பதும், 2-வது நபர் அப்துல்லாபக் என்பதும் தெரிய வந்துஉள்ளது. இதில் முதல் தீவிரவாதியான உமர் இஸ்மாயில் தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக பாரீஸ் நகரைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் நடத்தியவனின் குடும்பத்தாரை கைது செய்து உள்ள போலீசார் விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் ஒருவர் வைத்திருந்த பையில் சிரியா நாட்டின் பாஸ்போர்ட் ஒன்றும் கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினர். பாரீஸ் நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய 8 தீவிரவாதிகளும், சிரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று பிரான்ஸ் புலனாய்வுத் துறை போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளன.
இதனிடையே பாரீஸ் நகர தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரின் அருகே உள்ள செயின்ட்மோலன்பீக் நகரில் 3 பேரை பிரசல்ஸ் நகர போலீசார் கைது செய்தனர். பாரீஸ் நகரில் இன்னிசை அரங்கு அருகே நின்ற காரின் நம்பர் பிளேட் பிரசல்ஸ் நகரின் உரிமம் பெற்றதாக இருந்தது. இந்த காரை வாடகைக்கு எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஜெர்மனியின் பவரியா நகரிலும் பாரீஸ் தாக்குதல் தொடர்பாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் தீவிரவாதிகள் 8 பேரும் பெல்ஜியம் நாட்டில் அண்டை நாடான பிரான்சுக்குள் எளிதாக நுழைந்து பாரீஸ் நகரில் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஐரோப்பாவில் சிரியஅகதிகள் போன்று போலியாக பதுங்கியிருந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிஉள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் 3 தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து பாரீஸில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. பாரீஸ் நகர எல்லைகளும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதம் பொறுப்பு ஏற்று உள்ளது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் அதிர்ச்சி தகவலாக, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஐரோப்பாவில் சிரிய அகதிகள் போன்று போலியாக பதுங்கியிருந்து உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது.
பாரீஸ் கொடூரத் தாக்குதலில் தொடர்புடைய இரண்டு தற்கொலை தீவிரவாதிகள், சிரியாவில் இருந்து போலியாக அதிகள் போன்றுவந்து பதுங்கியிருந்தனர் என்று டெயிலி மெயில் செய்தி வெளியிட்டு உள்ளது. பிறவெளிநாட்டு பத்திரிக்கை செய்தியை கோடிட்டு இச்செய்திகள் வெளியாகிஉள்ளது.
ஐரோப்பாவிற்குள் சிரியஅகதிகள் போன்று போலியாக ஊடுருவி பதுங்கியிருந்து உள்ளனர். தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு பேர் அகதிகள் பாஸ்போர்ட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கிரீஸ் வந்து உள்ளனர். பாரீஸில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் உடலில் இருந்து பிரான்ஸ் நாட்டு போலீசார் கைப்பற்றிய சிரியஅகதியின் பாஸ்போர்ட் கிரிஸ் நாட்டு பதிவுஎண்ணை கொண்டு உள்ளது. இரண்டு தீவிரவாத குழுக்கள் சிரியாவில் இருந்து துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு பயணத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
தாக்குதல் நடத்திய மற்றொருவனிடம் இருந்து எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் எகிப்தில் எடுக்கப்பட்டதை காட்டுகிறது என்று செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இத்தகைய தகவல்கள் பிரான்ஸ் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது என்று விமர்சிக்கப்பட்டு உள்ளது. இரண்டு பேர் கிரீஸ் நாட்டிற்கு கடந்த மாதம் வந்து உள்ளனர் என்று பிரான்ஸ் போலீசார் தெரிவித்து உள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் இஸ்சொன்னேவில் இருந்துவந்த மொஸ்டேபை இஸ்மாயில் உமர்(வயது 29) என்று பிரான்ஸ் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.
செர்பியா மீடியா மற்றொரு தீவிரவாதியின் பெயரை வெளியிட்டு உள்ளது. அவன் அகமத் அல்முகமது (வயது 25) என்றும் பாரீஸ் செல்லும் வழியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டின் லெரோஸ் தீவிற்கு வந்துஉள்ளான் என்று தெரிவித்து உள்ளது. இவர்கள் அகதிகளாக சிறிய படகில் வந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அல்முகமது மாசிடோனியாவில் இருந்து செர்பியாவிற்குள் அக்டோபர் 7-ம் தேதி நுழைந்ததாகவும், குரோஷியா மற்றும் ஆஸ்திரியாவிற்கு செல்வதற்கு முன்னதாக செர்பியாவில் தஞ்சம் கோரியிருந்தார் என்றும் செர்பியா செய்தி பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.
Post a Comment