Header Ads



"எமது சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பை, அல்லாஹ் உலமாக்கள் தலையில் சுமத்தியுள்ளான்"

-இக்பால் அலி-

நாங்கள் உலமாக்கள் ஒன்றுபடுவது என்பது எமது சமூகம் ஒன்று பட்டு விட்டது என்பதன் பொருள்.  எந்த சமூகத்திலே பிளவு பிரச்சினைகள் இருக்கின்றதோ, எந்த ஊரிலே மார்க்கச் சர்ச்சைகள் இருக்கின்றதோ எந்த ஊரிலே மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் நடக்கின்றதோ  உலமாக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்றே கருத வேண்டும். எந்த இடத்தில் உலமாக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களோ , எந்த இடத்தில் உலமாக்கள் அமைதியாக இருக்கிறார்களோ அந்த இடத்திலே அந்த சமூகத்தை சரியான முறையில் வழிநடத்துவதை நாங்கள் பார்க்கின்றோம். நபிமார்கள் அனைவருமே இந்த ஒற்றுமைக்காகத் தான் குரல் கொடுத்தார்கள் என என்று குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் சமூக சேவை மற்றும் பிரச்சாரப் பணிக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் கபூரி ரியாத் தொவித்தார்.

குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா மற்றும் இம்மாவட்டத்திலுள்ள 24 பிராந்திய கிளை அமைப்புக்களும் இணைந்து நடத்தும் சமுதாய மாற்றத்திக்கான உலமாக்களின் வகிபாகம் என்ற தொனிப் பொருளில் மாபெரும் எழுச்சி மாநாடு 31-10-2015 குருநாகல் தெலியாகொன்ன ரோயல் மண்டபத்தில்  நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய  அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் கபூரி ரியாதி இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

பிரச்சாளரக் களத்தில் இரு தரப்பினர் உள்ளனர்  ஒரு தரப்பினர் உலமாக்கள் இன்னொரு தரப்பினர் பொது மக்கள் உள்ளனர் .இந்த பொது மக்களை வழிநடத்தக் கூடிய சமூகமாக உலமாக்கள் இருத்தல் வேண்டும். உலமாக்கள் மத்தியிலே ஒற்றுமை அவசியம். உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளின்றி ஒன்று பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பது மிக முக்கியமாக இருந்து கொண்டு இருக்கிறது.

உலமாக்களைப் பொறுத்தவரை தினமும் அல்லாஹ்வைப் புகழக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். உலமாக்கள் நபிமார்களின் வாரிசு என நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்கின்றோம். நபிமார்கள் செய்து கொண்டிந்த பணியை நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம் என நாங்கள் சொல்கின்றோம். நபிமார்கள் செய்த பணியை நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம். அவ்வாறாயின்  உலமாக்களைப் பொறுத்தவரையிலும் அல்லாஹ்வினால் எமது சமூகத்திற்கு வழங்கப்ட்ட பெரும் அருட் கொடையாகும். குர்ஆனில் உலமாக்கள் பற்றி சிறப்பாக உயர்த்திக் கூறக்கப்பட்டுள்ளது.

எவ்வாறுதான எங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உலமாக்களைப் பொறுத்தவரையில் எமது சமூகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பை எமது தலையிலே அல்லாஹ் சுமத்தியுள்ளான். உலமாக்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. அல்லாஹ் விரும்ப கூடிய அழைப்பாளர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்போமாயின் மக்களை வழி நடத்துகின்ற விதம் எவ்வாறு என்பதை முதலில்; நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரச்சாரப் பணியாளர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிசம்தான் பள்ளிவாசல்களின் மிம்பர்கள். இன்று மிம்பர்களை சரியான முறையில் பயன்படுத்திவோமாயின் மக்களுக்கு குத்பாக்களை சரியான முறையில் வழங்குவோமாயின் மக்கள் மத்தியிலே ஒரு போதும் பிளவுகள் வரப் போவதில்லை. மக்கள் மத்தியிலே பிளவுகள் வருவதற்கான எவ்வகையிலும் அவசியம் இல்லை. மக்களுக்கு தேவையான விடயங்கள் சொல்லப்பட வேண்டும். சில குத்பாக்களைப் கவலையுடன் பார்க்கின்றோம். எதை ஓதுகின்றார்கள் எந்த காலத்தில் எதை ஓத வேண்டும் எனத் தெரியாமல் ஓதுகின்றார்கள். சில உலமாக்கள் கடமைக்காக குத்பாக்களை தொகுத்து வழங்குவதை நாங்கள் பார்க்கின்றோம்.

குத்பாக்கள் என்பது மிகப் பெரும் மேடையாக இருக்கிறது. இந்த சமூகத்தை வழிநடத்தக் கூடிய மிக முக்கிய இடமாக இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் இந்த மிம்பரை மிக அழகாகப் பயன்படுத்தினார்கள். சுஹாப்பாக்கள் ,முன் சென்ற உலமாக்கள் மிக அருமையாகப் பயன்படுத்தினார்கள். இந்த மிம்பரை அழகான முறையிலும் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் ஒழுரு போதும் மறந்து விட முடியாது. எனவே இந்த சமூகத்தில் ஒற்றுமை இருக்க வேண்டும் எனில் உலமாக்கள் மத்தியில் ஒற்றுமை வருதல் வேண்டும். உலமாக்கள் மத்தியிலே புரிந்துணர்வு வருதல் வேண்டும். இன்னொருவரின் கருத்தை அவமதிக்காமல் கண்ணியப்படுத்தப்பட வேண்டிய முறை எங்களிடத்தில் இருக்க வேண்டும்.  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

5 comments:

  1. உலமாக்கள் ஒறுமைப்பட வேண்டும் எல்லா வடயத்திலுமா.?ஏகத்துவககொள்கையில் ஒன்று படலாம் அல்லாஹ்வும் நபியும் காட்டித்தராத வழிகளில் எவ்வாறு ஒற்றுமையாவது?

    ReplyDelete
  2. With all due respect, I don't agree on many points with the author. Firstly, it is welcome having differences between Ulamas.That is how Madhhabs formed. Differences in opinions are healthy.
    Secondly, who is Ulama? Is it someone finishing the 8 year progrm?? Maulana, Maulavi, Sheigh?? No. Even someone, on his own interest, learned Theen, has a good understanding of Theen, is an Aalim. No such a thing Allah has given the responsibility to lead the society. In my opinion, no Muslim need to listen to JU. Be can be a Good Muslim as long as he follows the Theen.
    Thirdly, no such a thing when Ulamas are quiet, there is peace.

    ReplyDelete
  3. Well said Mustafa Jazakallah

    ReplyDelete
  4. உண்மையான உலமா என்பது இஸ்லாத்தை கற்க வேண்டும் என்ற நோக்கில் விளங்கிக் கற்பவனே எனினும் சமுக நடைமுறையில் ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எதற்கு ஓர் வழிமுறை (சுட்டி) வேண்டும் என்பதற்காக முறையாக 08 வருடம் கற்றவர்கள் என்ற வழிமுறையை ஏற்படுத்தியூள்ளனர் இதில் தப்பில்லை ஆனால் இவ்வாறு 08 வருடம் கற்றவர்களை விட அதிகமாக மாரக்க அறிவூள்ள சாதாரண மணிதர்களும் உண்டு காரணம் உலமாக்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளளும் நபர்களில் பலர் அந்த 08 வருடத்திலோ அல்லது அதற்குப் பிறகோ மார்க்கத்தை விளங்கிக் கற்க முனவருவதில்லை இதலால்தான் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன

    அதிலும் விசேடமாக சில ஆலிம் என்று சொல்பவர்கள் நாம் கேள்வி கேட்டாலே இனி நம்முடன் பேசமாட்டார்கள் காரணம் அவர்களின் அறிவூத்திறன் வெளிப்பட்டுவிடும் இதுதான் நமது மார்க்கத்தில் உலமாக்களின் நிலை பாவம் சமுகம் ஆனால் அல்லாhவிடம் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.