நளீம் ஹாஜியார், வருடாந்த ஞாபகர்த்த சொற்பொழிவு
பேருவலை ஜாமிஆ நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பான றாபிததுன் நளீமிய்யின் மத்திய செயற்குழு ஆறாவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ள மர்ஹூம் நளீம் ஹாஜியார் வருடாந்த ஞாபகர்த்த சொற்பொழிவு எதிர்வரும் திசம்பர் மாதம் 02ம் திகதி புதன் கிழமை (02-12-2015) மாலை 6.15 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஜாமிஆ நளீமிய்யாவின் கௌரவப் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் தலைமையில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழித் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்கள் 'தேசிய ஒற்றுமையை நோக்கிய நல்லிணக்கம் '(Reconciliation for National Unity) எனும் தலைப்பில் விஷேட சொற்பொழிவாற்றவுள்ளார்.
மேற்படி நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சமூகநலன் விரும்பிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்கள் உட்பட நளீமிய்யாவின் பழைய மாணவர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக றாபிததுன் நளீமிய்யின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் தாஜுதீன் ஷாகிர் (நளீமி) தெரிவித்துள்ளார்.
May Allah forgive him and Bless him for his generocity in donating his properties to the muslim society for education.
ReplyDeleteBut thoese who celebrate anual function ? It sounds more close to KATTAM -FATHIHA methedology and the BIDA of celebrating MEELAD day.
May Allah guide these.. so called educated society toward pure islamic way followed by the companions of Muhammed (sal). and listend to scholars who follow the way of SALAF us saleheens.