Header Ads



வெள்ளை வான் கடத்தல்களின், கோட்பாதர் கோத்தபாயவே - மேர்வின் சில்வா


வெள்ளை வான் கலா சாரத்தின் கோட் பாதர் கோத்தபாய ராஜபக்ஷ தான் என அதில் ஒரு வச னத்தை யேனும் தான் மாற்ற மாட் டேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வெள்ளைவான் கலாசாரம் தொடர்பில் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவிற்கு அண்மையில் வழங்கப்பட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத் தினால் மன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்து.

2011 ஆம் ஆண்டு முகத்துவாரம் பகுதியில் இருவரை வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சிகளின் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

குறித்த நபர்களின் கடத்தல் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் தகவல்கள் இருந்தால் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர ¡குமாறு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் இந்த கடத்தல் தொடர்பில் முழுமையான தகவல்களை குற்றத் தடுப்பு பிரிவினருக்கு வழங்கவில்லை என்பதோடு, எழுத்து மூலமாக தகவல்களை மாத்திரமே வழங்கியதாக அந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன் றத்திற்கு அறிவித்திருந்தது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வசம் காணப்படும் அனைத்து தகவல் களையும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான், ஜனவரி 26 ஆம் திகதி அடுத்த வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்துள்ளார். கடத்தல் மற்றும் திருட்டு தொடர்பான சகல நடவடிக் கைகளையும் கோத்தபாய மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரே முன்னின்று செயற்படுத்திய தாகவும், அதனால் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டங்கள் பிழையானது எனவும் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.