பயங்கரவாதம் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள், இன்று தடுமாறுகின்றன - நிமால் சிறிபால சில்வா
இலங்கைக்கு மலர் மாலை வைத்து பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வணங்க வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக பயங்கரவாதம் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பித்த நாடுகள் இன்று தடுமாறி வருகின்றன. பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளினால் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியவில்லை எனவும், இந்த நாடுகள் இலங்கையை மலர்களை வைத்து வணங்க வேண்டும் என்றார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யுத்தத்தை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் கோரியிருந்ததன. எனினும் இலங்கை அதற்கு செவிசாய்க்காமல் வெற்றிகரகமாக பயங்கரவாதத்தை இல்லாதொழித்துள்ளது.
பிரான்ஸ், சுவீடன், பிரித்தானிய, அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளுடனான யுத்தத்தின் போது எம் மீது அழுத்தங்களை பிரயோகித்திருந்ததன.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தாதுவிட்டால் ஒருபோதும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என மேற்குலக நாடுகள் இலங்கைக்கு பாடம் சொல்லிக் கொடுத்தன.
ஆனால் இப்பொழுது நல்லிணக்கம் ஏற்படாத காரணத்தினாலா பிரான்ஸில் தாக்குதல் நடத்தப்பட்டு 150 பேர் கொல்லப்பட்டனர் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதத்தை சில விடயங்களைக் கொண்டு வரையறுத்துவிட முடியாது. எனினும் தற்பொழுது பயங்கரவாதம் பற்றி பாடம் கற்றுக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளை ஒழிக்க ஏன் பரிசில் கொத்தனி குண்டுகளையோ(கிளஸ்டர் குண்டு ), இரசாயன குண்டுகளையோ போடவில்லை என கேட்கிறார் போல அமைச்சர்
ReplyDelete