வட்டாரப்பிரிப்பு முறைமையும், வடக்கு முஸ்லிம்களும்
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டாரப்பிரிப்பு முறைமையும், வடக்கு மாகாண முஸ்லிம்களின் உள்ளூராட்சி பிரதிநிதித்துவங்கள் குறித்தும் விஷேட கலந்துரையாடல் நிகழ்வு நாளை 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2.30 மணி முதல் வவுனியா முஸ்லிம் மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில்; நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்குப் பிராந்திய செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் முஸ்லிம்களின் உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை வடக்கில் உறுதி செய்தல் குறித்து முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் அனவரையும் குறித்த நிகழ்வில் பங்கேற்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்குப் பிராந்திய செயற்குழு அழைப்புவிடுக்கின்றது.
Post a Comment