கப்ருக்குள் எம்மிடம், கேட்கப் போவது..?
-Mohamed Anees -
நாளை கப்ருக்குள் எம்மை எழுப்பும் முன்கர் நகீர் எம்மிடம் கேட்கப் போவது
நீ SLTJ ஆ?
ACTJ ஆ?
ஜமாஅத்தே இஸ்லாமா?
தப்லீக்கா?
அல்லது?
ஜமாதுஸ் ஸலாமாவா?
என்பதல்ல
உன் இறைவன் யார்?
உன் மார்க்கம் என்ன?
உனது நபி யார்? என்பதேயாகும். இதை எண்ணிணாலே போதும் கொள்கை பேசி எவரும் மார்க்கத்தை கூறு போடாதிருக்க
#கொள்கைய_வச்சு_மார்க்கத்த__வளருங்கப்பா
#மார்க்கத்த_வித்து_கொள்கைய__வளர்க்காம
2
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் மகனுக்கு செய்த உபதேசம் உலகம் முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான உபதேசமாகும்.
அல்லாஹ்வை மட்டும் வணங்கு!
அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே!
சகமனிதர்களைப் பார்த்து முகத்தை திருப்பாதே!
பெருமை அடிக்காதே!
கர்வம் கொள்ளாதே!
சப்தத்தை உயர்த்தாதே!
நடையில் நடுநிலையை பேணு!
இதில் எந்த ஒன்று எவரிடத்தில் இல்லையோ அவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான், மாறாக வெறுப்பான் என்று முத்தாய்ப்பான உபதேசங்களைக் கூறினார்கள்.
Post a Comment