வசீம் தாஜூதீன் கொலையை விசாரணைசெய்த நீதிபதி இடமாற்றம், மைத்திரி நடவடிக்கை மேற்கொள்கிறார்
கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அவர் குறிப்பிட்டார்.
வாஸிம் தாஜூதீன் கொலை மற்றும் 600 மில்லியன் ரூபா சில் அனுஸ்டானங்களுக்கான ஆடை வழக்கு என்பவற்றை நீதிவான் நிசாந்த பீரிஸே விசாரணை செய்துவந்தார்.
இந்தநிலையில் அவரின் இடமாற்றத்துக்கு பின்னால் சில காரணங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அரசாங்கம் மாறியுள்ள போதும் அரசு இன்னும் மாறவில்லை. எனினும் அதனை மாற்றமுடியும் என்று சேனராத்ன குறிப்பிட்டார்.
இதன் ஒரு கட்டமாக முதல் தடவையாக கடந்த 10ஆம் திகதி அன்ன்கார்ட் ஆயுதக்கப்பல் விடயத்தில் அரச நடவடிக்கை மாற்றம் ஒன்று செய்யப்பட்டது என்பதையும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ், 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் மாத்தறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment