சோபித்த தேரரின் மரணம் தொடர்பில், பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
சோபித்த தேரரின் மரணம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அவரது மரணம் தொடர்பில் தெளிவான மருத்துவ அறிக்கை ஒன்று தம் வசம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாதாரண வைத்தியசாலை ஒன்றில் நோயாளிகளின் உடலுக்குள் செல்லக்கூடிய பக்றீயா மாதிரிகள் இரண்டே தேரரின் உடலுக்குள்ளும் சென்றிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுடோமொனஸ் ஏருகிஉன்ஸா, எசினடோபெக்டர் என்ற பக்றீரியா வகைகளே தேரரின் உடலுக்குள்ளும் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது தொடர்பாக நாழிதள் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் பொன்சேக்கா த சொய்ஸா, தேரரின் வைத்திய பரிசோதனை அறிக்கை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மிகுந்த அவதானத்தடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment