சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷியாவுடன் இணைய, எந்த திட்டமும் இல்லை - அமெரிக்கா
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷியவுடன் இணைந்து போரிட எந்தஒரு திட்டமும் இல்லை என்று அமெரிக்கா தெரித்து உள்ளது.
பாரீஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தீவிரம் அடைந்து உள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷியா ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்திவந்த நிலையில், பிரான்சும் சரமாரியாக தாக்குதலை நடத்திவருகிறது. பிரானஸ் விமானப்படை விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மற்றும் முகாம்களை குறிவைத்து குண்டுமழை பொழிகிறது. ரஷியாவும் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திஉள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் ரஷியா இடையே புதுகூட்டணி ஏற்பட்டது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரானபோரில் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே கருத்தொற்றுமை இருந்தது கிடையாது.
ரஷியாவின் அதிரடியால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மேற்கத்திய நாடுகள் முன்வைத்தாலும், பொதுமக்கள் புதினுக்கு ஆதரவாக அங்கு பேரணியை நடத்தினர்.
ரஷியாவின் அதிரடியை மேற்கத்திய நாடுகள் விமர்சித்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அமெரிக்கா எங்களை சேர்த்துக் கொள்ள தயங்கியது, போரில் உதவிசெய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை ரஷியா முன்வைத்தது. பாரீஸ் தாக்குதலால் கோபம் அடைந்துஉள்ள பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டு இருக்கிறார். இவ்விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட அமெரிக்கா மற்றும் ரஷியாவிற்கு பிரான்ஸ் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷியவுடன் இணைந்து போரிட எந்தஒரு திட்டமும் இல்லை என்று அமெரிக்கா தெரித்து உள்ளது. “தற்போது, எங்களுக்கு எந்தஒரு திட்டமும் கிடையாது... நாங்கள் ரஷியவுடன் ஒருங்கிணைப்பில் இல்லை, நாங்கள் ரஷியாவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இல்லை, இதுகுறித்து எந்தஒரு திட்டமும் எங்களிடம் கிடையாது,” என்று பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Post a Comment