நிறைவேற்று ஜனாதிபதி முறையையை நீக்க, சுதந்திர கட்சியும் அங்கீகாரம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையை நீக்குவதன் பொருட்டு இன்று (18) அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ள யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரமளித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
இதன்போதே இந்த அனுமதி கிடைக்கப்பெற்றதாக, சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தல் தொடர்பான 2 அமைச்சரவை பத்திரங்கள் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இதனிடையே, நேற்று கூடிய சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வேறு கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பல உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
Post a Comment