தமிழ் மக்கள் மஹிந்த ராஜாக்ஷவுக்கு, நன்றி தெரிவிக்க வேண்டும் - முபாறக் அப்துல் மஜீத்
தமிழ் கைதிகள் விடுவிப்பை உலமா கட்சி வரவேற்பதுடன் தமிழர் போராட்டக்குழுக்கள் தம்மால் கைது செய்யப்பட்டோரை இல்லாதொழித்தது போல் மஹிந்த அரசு செய்யாமல் அவர்களை சிறையில் வைத்து பாதுகாத்தமைக்காக தமிழ் மக்கள் மஹிந்த ராஜாக்ஷவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
வடக்கு கிழக்கை ஆட்சி செய்த ஈ பி ஆர் எல் எப், ரெலோ மற்றும் விடுதலைப்புலிகள் போன்ற அமைப்பினர் தமது அதிகாரத்துள் வாழ்ந்த முஸ்லிம்கள் பலரை விசாரணை என்ற பெயரில் கைது செய்தனர். அவர்களை கொஞ்ச நாட்கள் சிறையில் வைத்து விட்டு பின்னர் சுட்டுக்கொன்றதே தமிழ் போராளிகளின் அரசியலாக கண்டோம். அதே போல் போராட்டத்தில் கைகளை உயர்த்தி சரணடைந்த ஆயிரக்கணக்கான சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசாரையும் சுட்டுத்தள்ளியதை கண்டுள்ளோம். காரைதீவில் ஈ பி ஆர் எல் எப்பின் இராணுவமான தமிழ் விடுதலை இராணுவம் தம்மஜடம் சரணடைந்த பொலிசாரில் தமிழ் பொலிசாரை பிரித்தெடுத்து அவர்களை விடுவித்து விட்டு முஸ்லிம் பொலிசாரின் கைகளை கட்டி விட்டு ஐ எஸ் பாணியில் சுட்டுக்கொன்ற வரலாறு மறக்கப்பட முடியாதது.
இவ்வாறெல்லாம் ஆயுத கலாச்சாரம் நிலவிய இந்த நாட்டில் தம்மால் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகளை இரவோடிரவாக சுட்டுத்தள்ளாமல் அவர்களுக்கு உணவு கொடுத்து பாதுகாத்துள்ளமை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நல்ல செயல்களில் ஒன்றாகும். அவர்கள் சிறை வைக்கப்பட்டதனாலேயே இன்று அவர்கள் விடுதலை செய்யப்படும் நிலையை காண்கிறோம். மஹிந்த நினைத்திருந்தால் இந்த கைதிகளை காணாமல் போனோர் பட்டியலில் மிகவும் இலகுவாக சேர்த்திருக்க முடியும்.
சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது .ந்த அரசு செய்து கொண்ட தேர்தல் கால இரகசிய ஒப்பந்தமாகும். அவர்களை ஒரேயடியாக விடுவித்தால் சிங்கள பெரும்பான்மை குழப்பத்துக்கு ஆட்பட்டு விடும் என்பதற்காகவே அரச அணுசரணையுடன் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஹர்த்தால்கள் என்பன நடைபெறுகின்றன என்பதே உண்;மையானதாகும். எது எப்படியிருப்பினும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை நாம் வரவேற்கும் அதே வேளை அவர்களை உயிரோடு வைத்திருந்தமைக்காக தமழ் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.
Post a Comment