"குடுவில் பிரதேசம், எனது சொந்த ஊருடன் தொப்புள் கொடி உறவைக் கொண்ட கிராமம்"
குடுவில் பிரதேசம் எனது சொந்த ஊருடன் தொப்புள் கொடி உறவைக் கொண்ட கிராமம். ஒவ்வொரு வருடமும் எனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து உங்களது தேவைகளுக்காக நிதி ஒதுக்கி வருகின்றேன். எதிர் காலத்திலும் அவற்றினை தொடர்வேன் என உறுதியளிக்கின்றேன். '
குடுவில், மாணிக்கமடு மற்றும் நல்லதண்ணிமலை பிரதேச சமுர்த்தி பயனாளிகளில் தெரிவு செய்யப்பட்டோருக்கான இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு 15.11.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை குடுவில் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்ற நிகழ்வின் போது உரையாற்றுகையில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் அவர்களது வழிகாட்டலில் அல்-ஹிமா நிறுவனத்தின் அனுசரணையுடன் 40 பயனாளிகளுக்கு இலவச குழாய் மூலமான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு இணைப்புகளுக்கான ஆவணங்களை கையளித்தார். இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜெமீல் காரியப்பர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரி, அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரும், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எம். அன்சார் உட்பட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது குடிவில் பிரதேச மக்களின் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அடங்கிய மனு ஒன்றும் பிரதேச வாசிகளால் கையளிக்கப்பட்டது.
Post a Comment