Header Ads



ரஷ்ய விமானத்தை தாக்கியவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி தேடி அழிப்போம் - புதின் சபதம்

எகிப்தின் சினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை தேடி அழிப்போம் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ந்தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் உடனே அறிவிக்கவும் செய்தனர். இந்நிலையில், விமானத்தை தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மூலம் வெடித்து சிதற வைத்துள்ளனர். விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து ஒரு பயங்கரவாத தாக்குதலே காரணம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டின் பாதுகாப்பு துறை வல்லூநர்களிடம் பேசுகையில் “இது போன்ற தீவிரவாத தாக்குதலை சந்திப்பது ரஷ்யாவிற்கு ஒன்றும் புதிதுயில்லை.  விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிப்போம்.  அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை பிடித்து தண்டிப்போம்” என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அடா அடி முட்டாள் நீதான் இன்னொரு நாட்டில் போய் மூக்கை நுளைத்தாய். அதனால் வாங்கிக் கட்டி ருக்காய் முஸ்லிம்களை அழிக்க போனாய் ஆண்டவன் உன்னை அழிக்கிறான் ஐ எஸ் அழிக்க போன நீஷாஅப்பாவி முஸ்லிம்களை ஏன் கொலை செய்ய வேண்டும் ?உன்னுடைய ஆயுதங்களை பரிசோதனை செய்ய முஸஸ்லிம்கள் தேவையா

    ReplyDelete
  2. மேற்கத்திய நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்த ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு தகுதியான இடம் அரபு நாடுகள் அதே வேலை அந்த ஆயுதங்களை பரிசித்து பார்ப்பதற்கும் தேவையான களம் அரபு தேசமான முஸ்லிம் நாடுகளும் அதிலுள்ள மக்களும்தான்.இவர்கள் நேரடியாக ஒருபோதும் யுத்தம் செய்ய மாட்டார்கள். அவ்வாறு நடந்தால் அவர்களின் மக்களும் அவர்களின் சுற்றுச்சூழலும் பாதிப்படையும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அதனால்தான் மத்திய கிழக்கு நாடுகளை அவர்களின் பயிற்ச்சி தளமாக தெரிவு செய்திருக்குரார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.