அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று விளித்தபோது, மௌனமாக சிரித்துக் கொண்ட மைத்திரி..!
கடுவலை முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாச, சுதந்திரக் கட்சி வைபவமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபாலவை விளிப்பதற்குப்பதில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று விளித்துள்ளார்.
கடுவலை முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாச கடந்த வியாழக்கிழமை சுதந்திரக்கட்சியின் கிளை அலுவலகமொன்றை கடுவலை நகரில் திறந்துள்ளார். இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக்கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரி அவர்களே என்று விளிப்பதற்குப் பதில் பழக்க தோசத்தில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே என்று புத்ததாச விளித்துள்ளார்.
இதனையடுத்து சபையில் இருந்த மேல்மாகாண சபை உறுப்பினர் ஹெக்டர் பெத்மகே, புத்ததாசவின் தவறைத்திருத்தியுள்ளார்.
அசடுவழிந்த புத்ததாச தனது தவறைத்திருத்திக் கொண்டு உரையைத் தொடர்ந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு மௌனமாக சிரித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவையும் மிஞ்சும் பழக்கதோஷம்! .
ReplyDeleteஇதுபோலத்தான் எத்தனையோ விடயங்களை நம்மவர்கள் அறிவுக்குத் தெரிந்தாலும் பழக்கதோஷத்தில் பின்பற்றிக்கொண்டு அதற்கு வக்காலத்தும் வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.