Header Ads



பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் தலைமையிலான குழு, யாழ்ப்பாண முஸ்லிம்களின் குறைகளை கேட்டறிந்தது (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணத்தில் தற்போது மீளகுடியேறி அல்லற்படும் மக்களின் துயரங்களை பேராசிரியர் எச்.எஸ் ஹஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

இன்றைய தினம் (01) காலை இம்மக்கள் வாழும் பகுதிகளான கிராமசேவகர் பிரிவு 86,87, பகுதிகளிற்கு சென்று குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர்.

இந்த சந்திப்பினை யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மேற்கொண்ட இக்குழு தங்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவினால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைபாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் பொறுப்பாளர் சந்திரசேன மாலியத்த என்பவரையும் அழைத்து அம்மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியது.

இறுதியாக யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் இக்குழு  அப்பொறுப்பாளருடன்  இணைந்து பல நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிற்கு  உதவ முன்வந்துள்ளது.

மேற்படி சந்திப்பில் யாழ் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவால் பிரதம  பேஷ் இமாம் மஹ்மூத் பலாஹி,தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் அகிலன்  மற்றும் யாழ் கிளிநொச்சி சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் ஜமால் முகைதீன்,செயலாளர் ஆர்.கே சுவர்க்ஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.