"ஒருதலை ஊடக தர்மம்"
-Dr. Hasan Basree-
பரிஸில் பயங்கரவாதமாம்
பல நூறுயிர் போயிற்றாம்!
பாரெங்கிலும் பேச்சாயிற்று.
பத்திரிகைகளின் மூச்சாயிற்று.
பலஸ்தீனில் அதுதானே
பல ஆண்டாய் நடக்கிறது?
பர்மாவிலும் அவ்வப்போ
படியெட்டிப் பார்க்கிறது!
சிரியாவும் ஈராக்கும்
சின்னா பின்னமானப்போ
சிறிதேனும் ஊடகங்கள்
சிந்திக்கக் காணவில்லை!
சீயென்னென் பீபீசி உம்
சீரான ஊடகதர்மத்தை
சீயென்பேன்! இதைவிடச்
சீரென்பேன், மிருகதர்மத்தை!
ஓருயிரைக் கொன்றாலும்
உலகத்தைக் கொன்றதாகும் என
ஆருயிர் நபியெமக்கு
அறிவுரை சொல்லியிருக்க
பாரிலொரு போரும்
பயங்கரமும் நடந்திட்டால்
வாரிக்கொண்டு வந்திடுவீர்-எமக்கே
வளமாய்ப் பட்டமும் சூட்டிடுவீர்!
Post a Comment