Header Ads



ஜேர்மனிற்குள் குடியேறியுள்ள அகதிகளை விட, குடிமக்களே அதிக குற்றங்களில் ஈடுபடுகின்றனர்


ஜேர்மனி நாட்டிற்குள் குடியேறியுள்ள அகதிகளை விட குடிமக்களே அதிக குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் அதிக அளவில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டில் செயல்பட்டுவரும் அகதிகளுக்கு எதிரான அமைப்புகள் புகார் கூறி வந்துள்ளது.

ஆனால், இதனை பொலிசார் ஏற்க மறுத்துள்ளதுடன், தற்போது புதிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஜேர்மனியில் வெளியாகும் Die Welt என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள அந்த தகவலில், ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகளை விட அதிக அளவில் அந்நாட்டு குடிமக்களே குற்றங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாக குறிபிட்டுள்ளது.

வெளியான இந்த புதிய தகவலுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சரான Thomas de Maiziere பதில் அளித்துள்ளார்.

அதில், அகதிகளில் பெரும்பாலானோர் எந்த குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. இதனை குடிமக்களின் சராசரி குற்ற நடவடிக்கைகளில் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும்.

உண்மையில், ஜேர்மனி அரசின் பாதுகாப்பையும் அமைதியையும் மட்டுமே அகதிகள் எதிர்ப்பார்ப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Die Welt பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பெரும்பாலான அகதிகள் பொது பேருந்துகளில் முறையான ஆவணங்கள் இன்றி பயணம் செய்வது போன்ற குற்றங்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.

அகதிகள் அதிக அளவில் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக தகவல் பரப்பபடுகிறது.

ஆனால், பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில் ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவான நபர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இது பிற குற்றங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கொசோவா, செர்பியா மற்றும் மசிடோனியா நாடுகளை சேர்ந்த அகதிகள் அதிக குற்றங்களிலும், சிரியா மற்றும் ஈராக் நாடுகளை சேர்ந்த அகதிகள் குறைவான குற்றங்களிலும் ஈடுபடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.