பிரான்ஸில் பாதுகாப்பாக தரையிறங்கிய, இலங்கை விமானம்
பிரான்ஸ் நோக்கிச் சென்ற இலங்கை விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் யு.எல்.563 என்ற இந்த விமானம் பிரான்ஸில் இலங்கை நேரப்படி நண்பகல் 12மணிக்கு தரையிறங்க வேண்டியிருந்தும் பிரான்ஸில் காணப்பட்ட அசாதாரண சூழல் காரணமாக பிரச்சினை ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டது.
ஆனால் சார்ல்ஸ் டு கோல் விமான நிலையத்தில் பாதுகாப்பாக குறித்த விமானம் தரையிறங்கியதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகம் மற்றும் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதோடு அவசரகால நிலையும் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாரிஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவையில் பாதிப்பில்லை
பாரிஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவை சீராக இடம்பெறும் என ஸ்ரீலங்கன் எயார் லயன்ஸ் ஊடக அபிவிருத்தி முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற யுஎல் 563 என்ற விமானம், சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தில் இலங்கை நேரப்படி பகல் 12.30 க்கு தரையிறங்கியது.
அந்த விமானம் பரிஸிலிருந்து உரிய நேரத்துக்கு திரும்பும் என்பதால் அந்த விமானத்தில் பயணம் செய்யவிருக்கின்ற பயணிகள், விமான நிலையத்துக்கு உரியநேரத்துக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்குள் புகுந்துள்ள ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதல்களை அடுத்து அங்கு தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரான்சுக்கான அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment