ஆஸ்ரேலியாவில் முஸ்லிம்களுக்காக, புதிய கட்சி தொடங்கப்பட்டது.
ஆஸ்ரேலியாவில் முஸ்லிம்களுக்காக புதிய கட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கட்சிக்கு "ஆஸ்திரேலிய முஸ்லிம் கட்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேற்கு சிட்னியில் நடைபெற்ற கட்சித் தொடக்க விழாவில், கட்சி நிறுவனர் தியா முகமது கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய முஸ்லிம் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் அனைத்து மாகாணங்களிலும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். ஆஸ்திரேலியாவில் நான்கைந்து கட்சிகள் முஸ்லிம் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய பாடுபடுவோம் என்றார் அவர்.
Post a Comment