Header Ads



மத்தள விமான நிலையத்தி்லிருந்து, டுபாய் பயணிக்க முயற்சித்தவரிடம் 65 மில்லியன் ரூபா கைப்பற்றல்

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணியொருவரிடமிருந்து 65 மில்லியன் ரூபா பணத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரிடமிருந்தே இவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

FZ 551 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் இன்று முற்பகல் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர், ஸ்டெலிங் பவுண், ரியால் மற்றும் டினார் உள்ளிட்ட மேலும் பல நாடுகளின் பணம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.