வைத்தியசாலைகளில் 50 வீதமானவர்கள், எக்ஸ்ரே எடுக்க தகுதியற்றவர்கள்
கொழும்பு நகரில் கடமையாற்றி வரும் எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்களின் 50 வீதமானவர்கள் தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் இவ்வாறு தகுதியற்றவர்கள் கடமையாற்றுகின்றனர் என அரசாங்க எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பின் பிரதான தனியார் வைத்தியசாலைகள் பலவற்றில் தகுதியற்றவர்களே எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்களே கடமையாற்றி வருவதாக சங்கத்தின் உபதலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளராக கடமையாற்ற முன்னதாக மருத்துவ கல்லூரி மற்றும் இலங்கை மருத்துவர் சபையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை எக்ஸ்ரே பயிற்சி நிலையம், பேராதனைப் பல்கலைக்கழகம், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி போன்றவற்றில் எக்ஸ்ரே தொழில்நுட்வியலாளர்களுக்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதிகளை வழங்கும் பயிற்சி நெறிகள் முன்னெடுக்ப்படுகின்றன.
உரிய பயிற்சி பெற்றுக் கொள்ளாது தகுதியற்றவர்கள் எக்ஸ்ரே தொழில்நுட்பவியலாளர்களாக கடமையாற்றுவது சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment