சோபித தேரரின் மரணம், 500 மில்லியன் ரூபாவை நட்டஈடு கோரவுள்ள டொக்டர்
மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் பேராசிரியர் காலோ பொன்சேகா வெளியிட்ட கருத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக டொக்டர் நெவில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அவரிடம் 500 மில்லியன் ரூபாவை நட்டஈடு கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் உடலில் விஷக் கிருமிகள் இருந்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோபித்த தேரருக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது வைத்தியர்கள் பரிந்துரைத்த சிகிச்சைகளை மாத்திரமே வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சோபித்த தேரரின் மரணம் தொடர்பில் நாழிதள் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் பொன்சேக்கா த சொய்ஸா, சாதாரண வைத்தியசாலை ஒன்றில் நோயாளிகளின் உடலுக்குள் செல்லக்கூடிய பக்றீயா மாதிரிகள் இரண்டே தேரரின் உடலுக்குள்ளும் சென்றிருப்பதாக குறிப்பிட்டார்.
சுடோமொனஸ் ஏருகிஉன்ஸா, எசினடோபெக்டர் என்ற பக்றீரியா வகைகளே தேரரின் உடலுக்குள்ளும் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இவருடைய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே டொக்டர் நெவில் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment