Header Ads



ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி செய்கின்றன - ரஷ்ய ஜனாதிபதியின் பரபரப்பு தகவல்

சர்வதேச பயங்கரவாதிகளான ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி செய்து வருவதாக ரஷ்ய நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.

துருக்கியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விளாடிமிர் புடின் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியுதவியை தனது நாட்டு புலனாய்வு துறை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள ரகசிய தகவல்களின் அடிப்படையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு 40 நாடுகள் நிதியுதவி அளித்து வருகிறார்கள் என்றும், அதில் G20 உறுப்பு நாடுகளும் சில உள்ளன’’ என பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

எனினும், எந்தெந்த நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கின்றனர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

விளாடிமிர் புடின் மேலும் பேசியபோது, ஐ.எஸ் தீவிரவாதிகள் பெட்ரோலிய பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதன் மூலம் பெரும் தொகையை ஈட்டி வருகின்றனர்.

இந்த வருமானத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்றும், ஐ.எஸ் தீவிரவாதிகளை முடக்கும் விதத்தில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் G20 உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.