UNP யுடன் இணைந்து, சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடிந்தது - டிலான்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து அரசாங்கம் ஒன்றை நடத்தி செல்வதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடிந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.
குறித்த அமைச்சுக்கு உரிய அலுவலகம் ஒன்றை பதுளை பிரதேசத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிகளுக்கும் 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் இடம் கொடுக்கவில்லை.
எனினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவையென்றால் இலகுவாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்க முடியும்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்துக் கொள்ள முடிந்துள்ளதாக டிலான் பெரேரா கூறினார்.

Post a Comment