Header Ads



UGCயின் முன்னாள் தலைவர் BCAS Campus யின் தலைமைப் பீடாதிபதியாக நியமனம்.

இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான BCAS Campus, தமது உயர் கல்வி விவகாரங்களுக்கான தலைமைப் பீடாதிபதியாக பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரேகம அவர்களை நியமனம் செய்துள்ளது என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BCAS Campus இன் உயர் கல்வி விவகாரங்களுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஷானிகா அவர்கள் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவராகவும், கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உப வேந்தராகவும் பணியாற்றியவராவார்.

1999 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தலைசிறந்த முன்னணி உயர் கல்வி நிறுவனமாக திகழ்ந்து வரும் BCAS Campus , உடனடி தொழில் வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்தும் உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வாயப்புகளை பல்வேறு துறைகளிலும் வழங்கி வருகிறது.அந்த வகையில் Civil Engineering, Quantity Surveying, Telecom Engineering , Law, Business Mgt, Computing மற்றும் BioMedical Sciences ஆகிய துறைகளில் Degree Foundation பாடநெறி முதல் HND, Top-Up Degree மற்றும் Master Degrees ஆகிய மட்டங்களிலான சர்வதேச தரம் வாய்ந்த தகைமைகளை இலங்கையிலேயே பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை BCAS Campus  வழங்ககின்றது.

இந்தப் பாட நெறிகளை சர்வதேச புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களான University of Wolverhampton (UK), London South Bank University (UK) என்பவற்றுடனும் Edexcel UK நிறுவனத்துடனும் BCAS கொண்டிருக்கும் கல்விசார் இணைப்புக்கள் ஊடாக வழங்குகின்றது.

இலங்கையில் கொழும்பு, கல்கிஸ்ஸை, கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய நகரங்களில் வளாகங்களையும், கிளை வளாகங்களையும் கொண்டியங்கும் BCAS Campus கடல் கடந்த மாணவர்களுக்கான கற்றல் உதவி நிலையம் ( Learning Support Centre) ஒன்றினை Qatar நாட்டிலும் கொண்டிருக்கிறது. மொத்தமாக 3500 க்கும் அதிகமான மாணவர்கள் BCAS Campus  இல் உயர் கல்வியைத் தொடர்கின்ற அதே வேளை தகுதியும் அனுபவமும் கொண்ட 250க்கும் அதிகாமன விரிவுரையாளர் குழாமையும் கொண்டிருக்கிறது.பேராசிரியர் ஷானிகா அவர்களை தனது கல்வி சார் விவகாரங்களுக்கான தலைமைப் பீடாதிபதியாக கொண்டிருப்பது BCAS Campus க்கு மேலும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.

உயர் கல்வித்துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கும் பேராசிரியர் சானிகா அவர்களின் தலைமையின் கீழ் BCAS Campus வழங்கும் கல்விச் சேவை சர்வதேச தரமிக்கதாக மேலும் உறுதி செய்யப்படும் என்பது நிச்சயமாகும்.

தாவரவியற் துறையில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் தனது முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பேராசிரியர் ஷானிகா அவர்கள் தனது முதுமாணிப்பட்டத்தினை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார். தனது கலாநிதிப்பட்டத்தினை பெல்ஜியம் நாட்டில் பெற்றுக் கொண்டு இரங்கை திரும்பிய பேராசிரியர் ஷானிகா அவர்கள் சிரேஸ்ட விரிவுரையாளராக கொழும்பு பல்கலைக் கழகத்தில் இணைந்தார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் தாவரவியல் திணைக்களத்தின் தலைவராகப் பணியாற்றிய அவர்கள் 2008 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக் கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 5 வருடங்கள் அப்பதவியினை வகித்ததன் பின்னர், பேராசிரியர் ஷானிகா அவர்கள் இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக 2013 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் தலைமைப்பதவியினை வகித்த முதலாவது பெண்மணியான  பேராசிரியர் சானிகா அவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் வரை அப்பதவியில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து இம்மாதம் முதல் BCAS Campus இன் தலைமைப் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டள்ளார்.

கடந்த 16 வருடங்களாக இலங்கையின் தனியார் உயர் கல்வித் துறையில் பாரிய பங்களிப்புக்களை மேற் கொண்டு வரும் BCAS Campus  புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் ஷானிகா அவர்களின் தலைமையின் கீழ் சர்வதேச தரம் வாய்ந்த தனியார் பல்கலைக் கழகமாக எதிர் வரும் நாட்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் என்பது நிச்சயமாகும்.

No comments

Powered by Blogger.