சியோனிஸவாதிகள் இலங்கையில் நிலை கொள்வதை முஸ்லிம் M.P.கள் எதிர்க்கவேண்டும் - அஸ்வர்
ARA.Fareel
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும் என்கிறார் அஸ்வர்
‘இஸ்ரேலிய சியோனிஸவாதிகள் அதிகமானோர் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குள் பிரவேசித்திருக்கிறார்கள்.
அமைச்சர்களின் அங்கீகாரமும்அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இஸ்ரேலிய சியோனிஸவாதிகள் இலங்கையில் நிலை கொள்வதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
அண்மையில் இஸ்ரேலிய சியோனிஸவாத குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி நட்புறவுச் சங்கமொன்று நிறுவியுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 21 பேர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து சமூகத்தின் நன்மைக்காக ஒன்றுபட வேண்டும். இலங்கையில் இஸ்ரேலின் ஊடுருவல் முஸ்லிம்களை நிச்சயம் பாதிப்புக்குள்ளாக்கும் சியோனிஸவாதிகள் இதுவரை காலம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்குள்ளே ஒரு பிரிவாக இயங்கி வந்தனர்.
இன்றைய அரசாங்கத்தின் பிரதமர் சியோனிஸவாதத்தை ஆதரிப்பதால் இதுவரை எமது நாட்டில் இரகசியமாக இயங்கி வந்த சியோனிஸவாதிகள் தற்போது பகிரங்கமாக இயங்க ஆரம்பித்துள்ளார்கள்.
கொழும்பு ஹோர்டன் பிளேஸில் இவர்களுக்கென கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பதவி வகித்ததால் இஸ்ரேல் இலங்கையில் தன்னை ஸ்தீரப்படுத்திக் கொள்ள முடியாத நிலை இருந்தது.
எமது நாட்டின் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒன்றிணைந்து வேறுபாடுகளை மறந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
இவ்வாறான ஒரு நிலைமையை எமது சமூக அரசியல் தலைவர்களிடம் காண முடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.
இஸ்ரேல் குழுவினரின் வருகை நாட்டின் விவசாயத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் உதவுவதற்காகவும் மாத்திரமேவும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் அதன் உள்ளார்ந்த நோக்கம் மாற்றமானதாகவே அமைந்துள்ளது.
பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களால் அப்பாவி சிறுவர்களும் பெண்களும் பாதிக்கப்படும்போது அந்த குற்றச் செயல்களைப் புரியும் சியோனிஸவாதிகளுக்கு இலங்கையில் களம் அமைத்துக் கொடுப்பதே ஒரு சிலரின் நோக்கமாக இருக்கிறது என்றார்.
Neer muslimgalin edriudan arasial seykireer
ReplyDeleteNalla aaloasanai welcome.
ReplyDeleteமேலுள்ள செய்திகள் உண்மையானவைதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் சுதாகரித்துக்கொள்ளவில்லை என்றால் இன்னுமொரு மியன்மார் இலங்கையில் உருவாகும் நிலை உள்ளது.ஒரு பக்கம் ஷியாக்களின் ஊடுருவல் மறுபக்கம் இஸ்ரேவேலர்களின் ஊடுருவல் இதுவல்லாம் நடக்குது இந்த தேசிய தலைவர்களுக்கு விளங்கவில்லையோ?
ReplyDeleteஇதில் கவனமெடுத்து செயல் படுவது முஸ்லீம்தலைமைகலது கடமை காரனம் இவர்கலின் ஆதிக்கம் முஸ்லீகலையே பாதிக்கும் வேருமதத்தவருக்கு பாதிப்பில்லை இதனால் இதை அவர்கலும் பெரிதாக அலட்டிக்கொல்லமாட்டார்கள் பிற்காலங்கலில் சில விரோத அமைப்புக்கலுக்கும் வேலையில்லாமல் சுலபமாய் போய்விடும்
ReplyDeleteIsreal embassey already here. Everything will come in the future.muslims always have a challenge
ReplyDelete