மகிந்தவுக்கு CALL எடுத்த, பிரதியமைச்சரின் கேவலமான மன்றாட்டம்..!
பிரதியமைச்சுப் பதவியை நியாயப்படுத்த நிஷாந்த முதுஹெட்டிகம முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயரை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராவார். எனினும் இவர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு பிரதியமைச்சுப் பதவியையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அண்மைக்காலம் வரை அவரை காட்டிக் கொடுத்தவர், துரோகி என்றெல்லாம் அவரது பழைய நண்பர்கள் வசைபாடி வந்தனர். இதிலிருந்து தப்பும் உபாய மார்க்கம் குறித்து சிந்தித்து அலுத்துப் போன நிஷாந்த முதுஹெட்டிகம, கடைசியில் மஹிந்தவின் பெயரையே விற்றுத் தப்புவதற்கு முடிவு செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடனேயே தான் பிரதியமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் அண்மைக்காலமாக கூறிவருகின்றார். இதன் பின்னர் அவருக்கு எதிரான விமர்சனங்களும் அப்படியே அமுங்கிப்போய்விட்டன.
இதற்கு முன்னதாக மஹிந்தவுக்கு அழைப்பை எடுத்த முதுஹெட்டிகம, சேர், எனக்கு வழக்கு , அது இது என்று ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் இருந்து தப்பித்துக் கொள்ள பிரதியமைச்சுப் பதவி ஒரு பாதுகாப்பாக இருக்கும். அதனால் தான் இதனை ஏற்றுக் கொண்டேன்.ஆனால் நமது அணியினர் என்னையும் மோசமாக விமர்சிக்கின்றார்கள். எனவே உங்களிடம் அனுமதி பெற்றே பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதாக சொல்லப் போகிறேன். யார் கேட்டாலும் நீங்களும் அப்படியே கூறிவிடுங்கள் சேர்..என்று மன்றாடியுள்ளார்.
மனமிரங்கிப்போன மஹிந்தவும் ஹம்.ஹம்.. என்று பதிலளித்துள்ளார்.
இப்போது தனக்கெதிரான விமர்சனங்களுக்கு மஹிந்தவை கைகாட்டும் முதுஹெட்டிகமவின் புத்திசாலித்தனத்துக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதியை மீற முடியாமல் மஹிந்தர் தவித்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
Post a Comment