பேஸ்புக் ஊடாக இன விரிசலை அனுமதிக்க முடியாது - நீதியமைச்சர்
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்று நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகள் தொடர்பில் புதிதாய அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டம் தொடர்பில் கொழும்பு டுடே நியூஸ் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ,
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தரங்கெட்ட முறையில் ஒருசிலர் இனவாத, மதவாத கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்ச்சியான இன விரிசலுக்கு வழிவகுக்கும். இதனையே நாம் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.
அது தொடர்பான நீதித்துறை வல்லுனர்களின் சிபாரிசுகள் தற்போது நீதிசேவை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்தின் தவறுகள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்பான விமர்சனங்களுக்கு ஒருபோதும் தடைவிதிக்கப்படாது. வழமைபோன்று அதற்கான சுதந்திரம் வழங்கப்படும்.
ஒரு சிலரை இலக்கு வைத்து தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ளுதல் மற்றும் பாடசாலை மாணவிகள், பெண்களின் புகைப்படங்களை துஷ்பிரயோகம் செய்து பதிவேற்றல் போன்ற செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலத்தில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.
இதனை தொடர நாம் அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகவே புதிய சட்டத்தின் அவசியம் குறித்து உணரப்பட்டது என்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நான் கேள்வி கேட்ட பொழுது நல்லவர்கள் போன்று பதில் சொன்னவர்கள் கூட, பதில் சொல்ல முடியாத நிலை வந்த பொழுது, எனது தாயாரை கேவலப்படுத்தி திருப்தி கண்டார்கள்.
ReplyDeleteஎதிர் பார்த்தது தான்
Delete