Header Ads



இந்த உலகம், அழகாக இருப்பவர்களுக்கு மட்டுமா...?


உலகின் அவலட்சணமான பெண் என யூடியூபில் வெளியான வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்தது மட்டுமல்லாது, தமது மனதில் எழுந்த மோசமான எண்ணங்கள் அனைத்தையும் கமென்ட்டில் கொட்டித் தீர்த்திருந்தனர்.

லிசி வேலாஸ்க்கேஸ் (26) என்கிற இந்தப் பெண் பிறக்கும்போதே ஒரு கண்ணில் பார்வையின்றி, அரியவகை வியாதியால் உடலில் எடை கூடாமலே போகும் பிரச்சனையுடன் பிறந்துள்ளார். இதனால், மிக மிக ஒல்லியாக தோற்றமளிக்கின்றார். ஆகவே, பல பேரால் சிறு வயது முதலே அவலட்சணமானவள் என்றே கிண்டல் கேலி செய்யப்பட்டு வந்தார்.

சில ஆண்டுகள் முன்பு, எதேச்சையாக, லிசி ‘உலகின் அவலட்சணமான பெண்’ எனப் பெயரிடப்பட்ட, இந்த யூடியூப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவரை அவலட்சணமாகப் பிறந்த உனக்கு வாழத் தகுதியில்லை. ஆகவே, தற்கொலை செய்துகொள்! என வெளியிடப்பட்ட பல்வேறு கருத்துக்களைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

இளம்வயது முதலே எத்தனையோ பேரின் விஷம் போன்ற வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த லிசி ‘என்னை யாரோ என்னவோவென வரையறுப்பதால், நான் அப்படி மாறப்போவதில்லை’ என மன உறுதியுடன் சொல்கிறார். 

தற்போது பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து பள்ளிக் குழந்தைகளிடம், இதுபோன்ற சிறு சிறு கேலி, கிண்டல்கள் எப்படி இன்னொருவர் மனதைப் புண்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தனது வாழ்க்கைப் பாதையைப் பற்றி புத்தகங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ள லிசி, தற்போது இதே வரிசையில் வாழ்க்கைப் பயணம் தொடர்பான ஒரு ஆவணப்படத்திலும் தோன்றியுள்ளார்.  

3 comments:

  1. NANBARGALE IZU ORU SOTPAKALA AVALACHCHANAM NAAM IZAIPPARTHU ALLAHVUKKU NANDRI SOLLA KADAMAIPATTULLOAM IPPADIYANA VARGLAI ALLAHVAI ETTRUKKONDU NALLA SALIHANA MANIZA VALTHAN AHIRATHTHIL PIRAHASAMAH NALLADIYARGALUDAN IRUKKACHCHAIVAN ,IPPADIYANA VISAYANGALAI PAARTHU NAAM PADIPPINAI PERAVENDRUM,
    NAAM ORU PAITHTHIYAKKARANAI PAARTHU ORUNALUM KINDAL SEYYAVO KEWALAMA NINAIKKAVO KOODAZU , VANAKKAM ALLAHVUKKUMATTUMTHAN KADAMAI ILLAI AZEPOAL PAITHTHIYAKKARAN SIRIYAKULANTHAI PONDDOORUKKUTHAN VANAKKAM VAAJIB ILLAI AZANAL NANM EPPOLUZUM INDA ULAHATTIL YARAIYUM KEWALAMAHA NINAIKKAWENDAM, ALLAH NAM ANAIVARAIYUM IPPADIYANA THAWARHALIL IRUNDU PAZUKAPPANAHA, AAMEEN..YARABBAL ALAMEEN

    ReplyDelete
  2. அல்லாஹ்வுடைய படைப்புகளில் குறை காணுவது அல்லாஹ்வின் படைக்கும் ஆற்றலில் குறை காணுவதாகவே அமையும்.மற்றவர்களுக்கு ஒரு படப்பினையாகவே படைக்கக்கூடும்.ஏன் நாம் காண்கிறோம் அங்கவீனர்கள் ஐந்து நேரம் தவறாமல் தொழுகிறார்கள்.ஆனால் எந்த அங்க குறையும் இல்லாத நன்றி கெட்டவர்கள் தொழுகை நேரத்தில் பேஸ் புக் சினிமா கரம் போர்ட் போன்றவற்றில் ஈடுபடவதை பார்க்கிறோம்.இவர்கள் அல்லாஹ்விடம் என்ன. பதில் சொல்வார்கள்?

    ReplyDelete
  3. உனக்கு என்னுடைய பாராட்டுக்கள் லிசி!

    வெளி அழகு என்பது ஒரு வீட்டின் வெளிப்பூச்சு போன்றது. அதை வைத்து மட்டுமே ஒன்றைச் சிறந்தது தீர்மானிப்பவர்களை முட்டாள்கள் என்று கூறுவது கூட போதாது.

    உன்னைத் தற்கொலை புரியச் சொன்னவர்கள் உயிருடன் உலாவும் நடைப்பிணங்கள் என்று நினைத்துக்கொள்!

    இந்த உலகம் எல்லோருக்குமானது. இங்கு நல்லெண்ணம் கொண்டோரும் உள்ளத் தூய்மை கொண்டோரும் நிறைய இருக்கின்றனர்.

    அதேவேளை ஆணையும் பெண்ணையும் இறைவன்தான் படைத்திருந்த போதிலும் பெண் என்பதற்காகவே அவளை மட்டந்தட்டி ஒன்றுக்கும் இயலாதவள் என்று அவர்களை இரண்டாந்தரப் பிரஜையாக நடத்துவோரும் கணிசமானளவு இருக்கின்றனர். அந்த வடிகட்டிய முட்டாள்களைப் புறக்கணித்து நீ துணிவுடனும் நம்பிக்கையுடனும் இருப்பது கண்டு மகிழ்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.