"சிறிசேன + ரணில் அரசாங்கம், மகிந்த ராஜபக்சவின் தந்திரோபாயங்களை பின்பற்றுகிறது"
சிறிசேன-ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தந்திரோபாயங்களை பின்பற்றுவதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்இரத்தினநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைப்பிரயோகம் மற்றும் தடியடியை மேற்கொண்டது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தங்களுடைய பிரச்சினைகளிற்கு தீர்வை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடிபிரயோகத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டமைக்காக அரசாங்கத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள அவர், வார்ட் பிளேசில் நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதல்கள் நல்லாட்சி அரசாங்கம், ஜனவரியில் மக்கள் பதவியிலிருந்து அகற்றிய அரசாங்கத்தை விட ஓன்றும் சிறந்ததல்ல என்பதை நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஜே.வி.பியின் உறுப்பினர்கள் அவர்களை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், பாராளுமன்றத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கேள்வி யெழுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் பிரச்சினை நியாயமானதாக இருக்கலாம் ஆனால் அவர்கள் பொது மக்களின் அன்றாட நடவெடிக்கைகலுக்கும், மக்களின் பாதுகாப்புக்கும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கும் குந்தகமாக இருக்க முடியாது. இவைகளை கருத்தில் கொண்டால் பொலிசாரின் நடவெடிக்கையிலும் நியாயம் உள்ளதாகவே தெரிகிறது. மீண்டும் JVP 1986 - 90 போன்ற விடயத்துக்கு அத்தி வாரம் விடுகிரோதோ என எண்ணத்தோன்றுகிறது.
ReplyDelete