Header Ads



அரசியல் கைதிகள் எவருமில்லை, பயங்கரவாத சந்தேகநபர்களே சிறைகளில் உள்ளனர் - அரசு திட்டவட்டம்

அரசியல் கைதிகளென நாட்டில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே சிறைகளில் இருப்பதாகவும் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது.


இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்க் கைதிகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகவும் இதன்போது விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் குற்றச்சாட்டுகள் இல்லாத கைதிகளை விடுதலை செய்யவும் அங்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.