Header Ads



கற்பித்த ஆசிரியையை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

தமக்கு பாடம் கற்பித்த ஆசிரியையை கொலை செய்த நபர் ஒருவருக்கு மாத்தறை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மாத்தறை உயர் நீதிமன்ற நீதவான் தமித் தொட்டவத்தே இந்த தண்டனையை விதித்துள்ளார்.

32 வயதான பி.ஜீ.மஹேந்திர புஸ்பகுமார என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக மாத்தறை திஹகொட பிரதேசத்தில் 52 வயதான மல்காந்தி ராஜபக்ஸ யாபா என்ற ஆசிரியையே கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொள்ளையிடச் சென்ற தம்மை ஆசிரியை அடையாளம் கண்டு கொண்டதனால், ஆசிரியை குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.