Header Ads



ஆரிப் சம்சுதீன் தலைமையில், "லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த தினம்"

(சுலைமான் றாபி)  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரசினரால் நடாத்தப்படவுள்ள "லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த தினம்" எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 2.00 மணிவரை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளதோடு, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதேவேளை இளைஞர் காங்கிரஸ் வரலாற்றில் முதற்தடவையாக அம்பாறை மாவட்டத்தில் 204 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 05 பேர் தெரிவு செய்யப்படுவதோடு அவர்களில் 18 வது தொடக்கம் 30 வயது வரைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துறைகளில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகளுக்கு "லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த விருதுகள்" வழங்கி வைக்கப்படவுள்ளதோடு, எதிர்வரும் காலன்கலிம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இது விஸ்தரிக்கப்படவுள்ளதாக நேற்றைய தினம் (28) கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.