இனச்சுத்திகரிப்பு செய்யபட்ட முஸ்லிம்களுக்கு, கௌரவமான மீள்குடியேற்றத்தை பெற்றுக்கொடுப்போம்
- அபூ அஸ்ஜத் -
இலங்கையின் அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த முஸ்லிம் தலைவர்களில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் முதலிடம் வகிப்பதை ஒருபோதும் எம்மால் மறந்து பேச முடியாது.முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட புலிகளுட.ன் முட்டி மோதி அரசாங்கத்தின் பாதுகாப்பினை ஓரளவேனும் பெற்றுக்கொடுத்த அந்த பெருந்தகை இன்று இந்த மண்ணில் இல்லாத போதும்அவரது பணிகளை மக்கள் நினைவு கூர்ந்து வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் குறிப்பாக 1990 ஆம் ஆண்டு காலப்பகுதி என்பது விடுதலைப் புலிகளின் உச்சகட்ட தனிநாட்டு கோறிக்கையின் வெளிப்பாட்டை காணலாம்.அதற்காகத்தான் தனித்தேசத்தினை உருவாக்கி அதில் ஆளுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டன.இதன் ஒரு பிரதான நோக்கமாக வடக்கில் வாழும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் மேற்கொண்ட ஒரு இனத்திற்கு எதிரான வெளியேற்றத்தின் ஆரம்பமாகும்.
யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை வாழ்ந்த முஸ்லிம்கள் முற்று முழுதாக பலாத்காரமாக அவர்களது உடமைகள் புலிகளினால் பறிக்கப்பட்டும்,வெறுங்கையோடு விரட்டப்பட்ட வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத ஈனத்தனமான செயலினை இந்த உலகம் நன்கறியும்.
இவ்வாறான ஒரு துரதிஷ்டமான நிலையினை வடக்கு முஸ்லிம்கள் சந்தித்த போது,அப்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க போதுமான உணர்வு பூர்வமான அரசியல் தலைமைகள் இருக்கவில்லை.தமது சமூகம் வெளியேற்றப்பட்டுவிட்டது அவர்களுக்கு நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும் இத தான் எமது கடமை என்று எண்ணி செயற்பட்ட புத்தளத்து ஒட்டு மொத்த மக்களை நாம் இந்த மாதத்தில் விஷேடமாக நினைவு கூர்வது அவர்களுக்கு எம்மால் கொடுக்கப்படும் கௌரவத்தினதும்,மறியாதையினதும் உச்சகட்டமாகும்.
அன்றைய தினத்தினை இன்றாக நாம் நினைத்து பார்க்க வேண்டிய தேவை முஸ்லிம்களாகிய எமக்கிருக்கிறது.அந்த ஒக்டோபர் மாதம் தான் வடக்கு முஸ்லிம்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட சரித்திரமொன்றின் முக்கிய மாதமாகும்.
எமது மக்களின் வெளியேற்றத்தின் பின்னர் அவர்கள் அனுபவித்த அகதி வாழ்க்கையும்,முகாமுக்குள் அவர்கள் எழுப்பிய அவலக் குரல்களும் இன்றுஞ எமது காதுகளில் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேறிவிட்டார்கள் என்று பொருத்தமற்ற தகவல்களை கொடுத்து இந்த மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் சக்திகள் இன்று எம்மிடையிலும் காணப்படுகின்றதை மறைத்த பேசவும் முடியாது.
இந்த யதார்த்தத்தின் பின்னியில் நின்று ஒரு முஸ்லிம் மகன் தமது சிந்தனையினை சற்று அகலப் பறக்கவிடுவானெனில் அவனது பார்வைக்கு உண்மையின் விம்பம் தெரியும் என்பதை எனது பார்வை கூறுகின்றது.தனது சகோதரன் துயருறுகின்ற பொது அவனுக்கு உதவி செய்யாமல் நாம் படோமோபமான வாழ்வை அனுபவிப்பது என்பது எந்தளவுக்கு நியாயமானது என்பதையும் ஒரு கண் நாம் எமது சிந்தணையில் விதைத்து வைப்பதும் எதிரல்கால் முடிவுகளின் தீர்வுக்கு உரம் சேர்க்கும் ஒன்றாகும்.
1990 களில் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் பல நுாறு அகதி முகாம்களில் இருந்த போது அவர்களுக்கு விமோசனம் கிடைக்காத என்று ஏங்கிய நாட்கள்,மாதங்கள்,வருடங்கள் எத்தனை,இதற்குள் தான் இந்த சமூகத்தின் விடுதலை பயணத்தினை ஆரம்பிக்க அரசியலு்க்குள் இழுத்தெடுக்கப்பட்ட இளையவர் தற்போதைய அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதையும் நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது.தமது சிறுவயதிலேயே அரசியலை இந்த சமூகத்தின் விடியலுக்காக தமது தோளில் ஏந்தி றிசாத் பதியுதீனும்,விடுதலைப் புலிகளின் கோறப்பசிக்கு அட்பட்ட ஒருவர்,அனைத்தையும் இழந்து தமது அகதியாக அல்லலுற்றவர்,இன்றும் இந்த மக்களின் இடைவிடாத தேவைகளை பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டவர்,
வன்னி மாவட்டத்துக்குள் வாழும் அனைத்து சமூகங்களின் விமோசனம் தொடர்பில் அதீத அக்கறை கொண்டட அமைச்சர் றிசாத் பதியுதீன் அனைத்து சமூகங்களினாலும் கவரப்பட்டவர்.மக்கள் சேவையினை முன்னிறுத்தி தம்மை நாடி வரும் அனைத்து மக்களினது துயரங்களை கேட்டு அதற்கு தகுந்த தீர்வினை கால தாமதமின்றி பெற்றுக் கொடுக்கும் மனத்துணிவினை கொண்ட சிறந்ததொரு அரசியல்வாதிகாக அவரை புடம் போட்டு காட்ட முடியும்,மக்கள் அவர் மீது கொண்ட பற்றும்,அன்பும் இன்றும் அவர் பிரதி நிதித்துவப்படுத்தம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் சான்றாக உள்ளது.
இவைகளுக்கு அப்பால் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,துரித அபிவிருத்தி,மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் உள்நாட்டுக்குள்ளும்,சர்வதேசத்திலும் பேசும் ஒருவராக நாம் அமைச்சர் றிசாத் பதியுதீனை அடையாளப்படுத்த முடிகின்றது.
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் கழிந்த போதும் இன்னும் இம்மக்களது கௌரவமான மீள்குடியேற்றம் இடம் பெறாத நிலை காணப்படுகின்றது.இந்த மீள்குடியேற்ற தடைகளுக்கு பின்னார் யார் அமர்ந்திருக்கின்றார்கள் என்பது கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் ஜெனீவா விவாதத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டி ஆற்றிய உரையானது இந்த நாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் பாராட்டினை பெற்றுள்ளது.
உணர்வு பூர்வமானதும்,உண்மையானதுமான இந்த பாராளுமன்ற உரை இந்த நாட்டு சமூக பற்றாளர்களின் சிந்தனையினை துண்டியுள்ளது தற்போது ஊடகங்கள்,சமூக வளைத்தளங்கள் மூலம் வெளிவருகின்ற ஆக்க பூர்வமான விமர்சனங்களும்,கருத்துக்களும் உறுதிப்படுத்துவனவாக அமைகின்றன.
எது எவ்வாறாக இருந்த போதும்,வடபுல முஸ்லிம்களின் மிளகுடியேற்றத்தின் பிரதான மனிதராக அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்படுவது தான் நியாயமானதொன்று,இந்த பணிக்கு குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள்,மக்கள் பிரதி நிதிகள் எவ்வித உவர்தல் காய்தலின்றி தமது பங்கின் வகிப்பகத்தை வழங்க வேண்டியது தார்மீன கடமையாகும்.
வட புல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இந்த மாதத்தில் எம்மால் ஆன அனைத்து உதவிகளையும், இம்மக்களின் கௌரவமான மீள்குடியேற்றத்திற்கு பெற்றுக்கொடுப்போம்..!!
Post a Comment