Header Ads



பொதுமக்கள் தம்மை பழிப்பது குறித்து, கவலைப்படும் மகிந்த

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த தமது ஆட்சியை புதிய அரசாங்கமும், பொதுமக்களில் சிலரும் பழித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பை அண்மித்த கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விகாரையொன்றின் சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, எங்களுடைய ஆட்சிக்காலத்தில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவியது. பயங்கரவாதிகளையும் பொதுமக்களையும் பிரித்தறிவது கடினமாக இருந்தது. பொதுமக்கள் மத்தியில் நடமாடியவர்களே திடீரென தற்கொலைத் தாக்குதல்களை மேற் கொண்டனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் கடுமையான போராட்டங்களின் பின்னரே பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை மீட்டெடுத்தோம்.

ஆனால் இன்றைய புதிய ஆட்சியாளர்களும், பொதுமக்களில் சிலரும் எங்கள் ஆட்சியை பழித்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் குற்றம், குறைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எங்களை விமர்சிப்பதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது நாங்கள்தான் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.